For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீரென டிரெண்டான இந்தியன் 2...ஏன்? என்ன காரணம்?

  |

  சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது.

  Recommended Video

  BiggBoss 6புது மாதிரியா இருக்க போகுதாம்...எப்போ ஆரம்பம் தெரியுமா? *TV

  அதற்கு பிறகு ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கு விவகாரம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படாமல் இதுவரை தள்ளி போய் கொண்டிருக்கிறது. தற்போது பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதால் இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

  இந்தியன் 2 படத்திற்காக சமீபத்தில் கமல் அமெரிக்கா சென்றார்.அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் மேக்அப்மேன் மைக்கேல் வெஸ்ட்மோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்த ஃபோட்டோக்கள் சமீபத்தில் வெளியாகின.இவர் கமலின் தசாவதாரம், அவ்வை சண்முகி, இந்தியன் ஆகிய படங்களில் கமலுக்கு மேக்அப் போட்டவர்.

  மீண்டும் போலீஸ் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...இப்போ யார் கூட தெரியுமா? மீண்டும் போலீஸ் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...இப்போ யார் கூட தெரியுமா?

  கமலின் பிளான் என்ன

  கமலின் பிளான் என்ன

  செப்டம்பர் மாத முதல் வாரத்தில் கமல் இந்தியா திரும்ப உள்ளதாகவும், அதற்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து ஒரு மாதம் வரை நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் சீசன் 6 ஐ தொகுத்து வழங்கும் பணி மற்றும் இந்தியன் 2 ஷுட்டிங் இரண்டையும் கமல் கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  ஷங்கரின் பிளான் இது தானா

  ஷங்கரின் பிளான் இது தானா

  பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக தான் தற்போது ஷங்கர் இயக்கி வந்த ஆர்சி 15 படத்தின் ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இந்தியன் 2 ஷுட்டிங்கை துவக்கிய பிறகு ஆர்சி 15, இந்தியன் 2 படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் ஷங்கர் கவனிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

  அறிவிப்பு வரலியே

  அறிவிப்பு வரலியே

  இந்தியன் 2 படத்திற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சீன்கள் இந்த செட்டில் தான் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஷுட்டிங் எந்த தேதியில் இருந்து துவங்கப்படுகிறது, இதுவரை வெளியான தகவல்கள் உண்மை தானா என படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

  இதுக்கு தான் டிரெண்டிங் ஆச்சா

  இதுக்கு தான் டிரெண்டிங் ஆச்சா

  இந்நிலையில் இன்று ட்விட்டரில் திடீரென #Indian2 ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதனால் புதிய அப்டேட் ஏதாவது இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்தனர். ஆனால் புதிய தகவல் என்னவென்றால், கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு உரிமத்தையும் லைகா நிறுவனத்திடம் இருந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. இதற்காக தான் இந்தியன் 2 திடீரென டிரெண்டாகி உள்ளது.

  இந்தியன் - 2 தகவல் உண்மையா?

  இந்தியன் - 2 தகவல் உண்மையா?

  ரெட் ஜெயன்ட் நிறுவனம் சமீப காலமாக பெரும்பாலான படங்களை வாங்கி வெளியிடுகிறது. கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் அன்புச் செழியன் வெளியிடுவதாக இருந்தது. பின்னர் உதயநிதி பேசி அது ரெட் ஜெயன்ட் மூலம் வெளியானது. இது தவிர முன்னணி நடிகர்களின் படங்கள் ரெட் ஜெயன்ட் பேனரில் வெளியாகிறது. ஆனால் லைகா நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் என்பதால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ட்விட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர். அவர்கள் பதிவிட்டாலும் ரெட் ஜெயன்ட் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. லைக்காவின் பொன்னியின் செல்வன் படமும் பேச்சுவார்த்தையில்தான் உள்ளது. ஆகவே இது ஊர்ஜிதமான தகவல் என்றால் அவர்கள் தரப்பில் அறிவித்தால் மட்டுமே, அதுவரை யூகம் மட்டுமே.

  English summary
  According to sources, Kamalhaasan's long waiting Indian 2 movie's threatical rights bagged by Udhayanidhi Stlain's Red Giant Movies. Official announcement will come soon. For this reason Indian 2 hastag becomes trending in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X