»   »  விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...

விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தையை கொலை செய்தவனை மகன்கள் பழிவாங்குவது தான் விஜய் 61 படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி படத்தை அடுத்து விஜய், அட்லீ கூட்டணி சேர்ந்துள்ள படம் விஜய் 61. படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள்.

Is it Vijay 61 story?

படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில் நித்யா மேனன் அப்பா விஜய்க்கு ஜோடி. தந்தையை கொலை செய்தவனை மகன்கள் பழிவாங்குவது தான் கதை என்று கூறப்படுகிறது.

இது ஏற்கனவே பலமுறை பல படங்களில் கூறப்பட்ட கதை தான் என்றாலும் அட்லீ ஏதோ வித்தியாசமாக அளிக்கிறாராம். தற்போதைய ரசிகர்களை இந்த கதை நிச்சயம் திருப்திபடுத்தும் என அட்லீ நம்புகிறாராம்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் பிரான்ஸ் செல்ல உள்ளதாம்.

  English summary
  According to reports, two sons are taking revenge for their father' murder is the story of Vijay's upcoming movie being directed by Atlee.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil