Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் மூத்த மகள் வாரிசு நடிகரை காதலிக்கிறாரா?: போனி கபூர் விளக்கம்
மும்பை:தன் மூத்த மகள் ஜான்வி நடிகர் இஷான் கட்டாரை காதலிப்பதாக பேசப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் ஹீரோவான இஷான் கட்டாரும்(நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி), ஜான்வியும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
இஷான், ஜான்வி காதலுக்கு போனி கபூர் பச்சைக் கொடி காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
போனி கபூர்
இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகியிருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஜான்வி
இஷான் கட்டார் அடிக்கடி ஜான்வியின் வீட்டிற்கு செல்கிறார் என்றும், அதை போனி கபூர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கபூர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, தடக் படம் ரிலீஸான பிறகு இஷான் ஒரு முறை கூட ஜான்வியின் வீட்டிற்கு வந்தது இல்லை. அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை என்றார்.
டியர் காம்ரேட்
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 26ம் தேதி வெளியான டியர் காம்ரேட் தெலுங்கு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் ரூ. 6 கோடிக்கு வாங்கியுள்ளார். அந்த படத்தில் ஜான்வியும், இஷானும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று கரண் தெரிவித்துள்ளார்.
உடல் எடை
ஜான்வி ரூஹிஹப்சா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை 10 கிலோ குறைத்தார். இந்நிலையில் கார்கில் கேர்ள் படத்தில் நடிப்பதற்காக தனது எடையை அதிகரிக்கப் போகிறாராம் ஜான்வி. அம்மா ஸ்ரீதேவி, அக்கா ஜான்வி வழியில் குஷி கபூரும் நடிகையாகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.