இயக்குனராக துடிக்கும் ஜான் விஜய்... ரஜினிக்கு கதை சொன்னாரா ?

சென்னை: தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கும் சில குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜான் விஜய். இவர் பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பால் மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

கபாலி, சார்பட்டா பரம்பரை, கோ, நேரம், ஓரம்போ மௌனகுரு, விடியும் முன் என பல நல்ல படங்களில் நடித்து தனது வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தி முத்திரையை பதித்து இருப்பார்.

சமீபத்தில் அவர் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாக சொல்லி இருக்கிறார்.

டாடி

டாடி

2021 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் அமேசன் பிரைம்ல் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தில் டாடி என்கிற ஆங்கிலோ இந்தியனாக நடித்திருப்பார் ஜான் விஜய். தனது சிறப்பான நடிப்பால் படம் முடியும் வரை நாம் டாடி என்கிற கதாபாத்திரத்தை தவிர ஜான் விஜய் என்கிற நடிகனை தென்பட விடாமல் அசத்தி இருப்பார். ஜான் விஜய் நடித்த டாடி கதாபாத்திரம் பெருவாரியான மக்களால் பாராட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மொழிகளில்

ஐந்து மொழிகளில்

ஜான் விஜய் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் நடித்திருக்கிறார். காமெடியன், வில்லன் மட்டும் இல்லாமல் வில்லத்தனம் கலந்த காமெடியனாகவும், காமெடி உணர்வோடு இருக்கும் வில்லனாகவும் நடிப்பதில் கைதேர்ந்தவர் ஆக இருப்பவர் ஜான் விஜய்.

இயக்குனர் ஜான் விஜய்

இயக்குனர் ஜான் விஜய்

பல மொழிகளில் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து விட்டதால் வரும் காலத்தில் தான் படம் இயக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். நாசர் தன்னிடம் ஒரு முறை , "நல்ல கதை எழுதி அதை இயக்கி அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடி என்றார்" என பதிவு செய்துள்ளார். இதனால் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் படைப்பாளியாக அடுத்த கட்டத்திற்கு நீ செல்வாய் என தன்னிடம் சொன்னதாகவும் அந்த பேட்டியில் ஜான் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு சொன்ன கதை

ரஜினிக்கு சொன்ன கதை

ஜான் விஜய் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்திருப்பார். ஆரம்ப காட்சியில் இருந்து படம் முடியும் வரை ரஜினியுடன் சேர்ந்து வருவார். அவருடன் படம் நடித்ததை பற்றி பகிர்ந்து கொண்டு அவருடனான பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்தார். பாபா படத்திற்கு முன்பு ரஜினியை சந்தித்து தான் ஒரு கதை சொன்னதாகவும் ரஜினி சமீபத்தில் அதைப் பற்றி என்னிடம் விசாரித்ததாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.என்ன வேண்டும் ஆனாலும் நடக்கலாம்.ரஜினியிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லி உள்ளனர். அந்த வரிசையில் ஜான் விஜய்யும் ஒருவர். பொறுத்து இருந்து பார்ப்போம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X