ராய் லட்சுமியின் 'ஜூலி 2' படம் நக்மாவின் கதையா?
Recommended Video

மும்பை: ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள ஜூலி 2 படம் நக்மாவின் கதையா என்று கேள்வி எழுந்துள்ளது.
தீபக் ஷிவ்தசானி இயக்கத்தில் ராய் லட்சுமி படுகவர்ச்சியாக நடித்துள்ள படம் ஜூலி 2. இந்த படத்தில் ராய் லட்சுமி நடிகையாக நடித்துள்ளார். திரையுலகில் முன்னேற அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை காட்டியுள்ளனர்.
இந்த படம் ஒரு நடிகையின் உண்மை கதை என்று தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.

படம்
1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகையின் கதை ஜூலி 2. அந்த நடிகை கான் நடிகருடன் சேர்ந்து நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார்.

நடிகர்
தென்னிந்தியா பக்கம் சென்ற நடிகை தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். அங்கு திருமணமான நடிகருடன் உறவு ஏற்பட்டதால் விரட்டப்பட்டார். பின்னர் போஜ்புரி படங்களில் நடித்தார். அங்கும் ஒரு நடிகருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது என்று நிஹலானி தெரிவித்துள்ளார்.

சல்மான் கான்
நிஹலானி பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவர் பேசியதை பார்த்தால் அது நக்மாவாக தான் என்று பலரும் கூறுகிறார்கள். சல்மான் கான் படம் மூலம் நடிகையான நக்மா தென்னிந்தியா பக்கம் வந்து ஒரு ரவுண்டு வந்தார்.

விவாகரத்து
திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான சரத்குமாருக்கும், நக்மாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த காரணத்தால் தான் சரத்குமாரின் மனைவி அவரை பிரிந்து சென்றதாகவும் கூறப்பட்டது.

ரவி கிஷன்
போஜ்புரி பக்கம் சென்ற நக்மாவுக்கும், அங்குள்ள திருமணமான ஹீரோ ரவிகிஷனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஜூலி 2 படத்தில் நக்மாவுடன் தொடர்பு வைத்த நடிகர் ஒருவர் நடித்துள்ளார் என்றார் நிஹலானி. ஜூலி 2 படத்தில் ரவி கிஷன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











