»   »  கபாலி சென்சார் ஆகிடுச்சா?

கபாலி சென்சார் ஆகிடுச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் கபாலி படம் நாளை சென்சாருக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி' படம் முடிவடைந்து, டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், படத்தின் ரீலீஸ் தேதியைக்கூட கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


சென்சார்

சென்சார்

இந்நிலையில், இந்த படம் இன்னும் தணிக்கை துறையினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை. தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் படத்தின் ரீலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தாணு அமைதி காக்கிறார்.
நாளை

நாளை

இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு நாளை (ஜுலை-8) அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலைக்குள் தணிக்கைக் குழு படத்துக்கு சான்றிதழ் வழங்கிவிடுவார்கள் எனத் தெரிகிறது.


ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

அதன்பிறகு, ‘கபாலி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். ‘கபாலி' மலாய் மொழியில் ஜுலை 29-ந் தேதி வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிரான்சில்

பிரான்சில்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரங்கமாக கூறப்படும் ரெக்ஸ் சினிமாஸில் ‘கபாலி' படத்தின் சிறப்பு காட்சி ஜுலை 21-ந் தேதி மாலை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போது ரிலீஸ் என்பது நாளை தெரியும்.
English summary
Rajinikanth's Kabali movie will be censored Tomorrow evening and the release date will also announce on the same day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil