ரகசியமாக நடந்த விழா.. தீயாய் பரவும் தகவல்.. காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சாமே?

By

சென்னை: நடிகை காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாகவும் மணமகன் பெயர் கவுதம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில், விபத்து நடந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர். இந்த படங்களின் ஷூட்டிங் கொரோனாவால் ஸ்தம்பித்துள்ளது. அரசு அனுமதி அளித்தப்பின் படப்பிடிப்புத் தொடங்க உள்ளது.

நிஷா அகர்வால்

நிஷா அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை, நிஷா அகர்வால். இவரும் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் திருமணம் முடிந்து மும்பையில் செட்டிலாகிவிட்ட நிலையில், நடிகை காஜல் அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக சில வருடங்களுக்கு முன் செய்தி வெளியானது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

ஆனால் அதை அவர் மறுத்திருந்தார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியிருந்தார். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பெல்லங்கொண்டா

பெல்லங்கொண்டா

இந்நிலையில், அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் நடிகை காஜல் அகர்வாலுக்கு நெருங்கிய தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் இந்த விழாவில் கலந்துகொண்டதாகவும் மணமகனின் பெயர் கவுதம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X