நடிகை காஜல் அகர்வால் கணவர் பெரும் பணக்காரரா? ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த நிஷா அகர்வால்!
மும்பை: காஜல் அகர்வாலின் கணவர் பெரும் பணக்காரரா என்ற ரசிகரின் கேள்விக்கு அவர் சகோதரி நிஷா அகர்வால் பதில் அளித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு ஆச்சாரியா
இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நடித்துள்ள மும்பை சாகா முடிந்து விட்டது.

எப்படி காதலித்தோம்
தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா பரவல்
அந்த பேட்டி வைரலானது. கொரோனா பரவல் இருப்பதால், ஹனிமூனுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார். அங்கிருந்து புகைப்படங்களாக வெளியிட்டு வந்தார். பின்னர் மணாலிக்கு சென்றனர். நடிகை காஜல் அகர்வாலின் தங்கை, நிஷா அகர்வால்.

நிஷா அகர்வால்
இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் ஆர்வ மிகுதியில், காஜல் அகர்வாலின் கணவர் பெரும் பணக்காரரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
Recommended Video

அருமையான மனது
இதற்கு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதில் அளித்துள்ளார் நிஷா அகர்வால். அதில், எல்லாவகையிலும் எல்லாவற்றுக்கும் மேலாக, ஞானத்தால் அவர் பணக்காரர். சிறந்த, அருமையான மனதைக் கொண்டவர் என்று கூறியுள்ளார். இதை அக்கா கணவர் கவுதம் கிட்ச்லுவுக்கும் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications