கமல் படத்திலிருந்து யுவன் திடீர் நீக்கம்?
கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்திலிருந்து இசையமைப்பாளர் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா திடீரென நீக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.

ரமேஷ் அரவிந்த்
‘சதிலீவாவதி', 'பஞ்ச தந்திரம்', ‘மும்பை எக்ஸ்பிரஸ்', ‘மன்மதன் அம்பு' போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்தவர், அதைத் தாண்டி நெருக்கமான நண்பர் ரமேஷ் அரவிந்த். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

யுவன்
உத்தம வில்லன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் கமல்.

அஞ்சான்
உத்தம வில்லனை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸின் அஞ்சான் படத்துக்கு யுவன்தான் இசை. எனவே, அவரே உத்தம வில்லன் படத்துத்துக்கும் இசை என்றார்கள்.

ஜிப்ரான்
ஆனால் கமலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கிறது. தனது விஸ்வரூபம் 2 படத்துக்கு இசையமைத்த ஜிப்ரானையே உத்தம வில்லன் படத்துக்கும் கமிட் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











