பாதியில் நிறுத்தப்பட்ட பிக் பாஸ் ஷூட்டிங்.. இந்த வார எவிக்ஷனை அறிவிக்காமல் திடீரென கிளம்பிய கமல்?
சென்னை: ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் நடைபெறாமல் கமல்ஹாசன் பாதியிலேயே கிளம்பி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா இந்த வாரம் வெளியேறி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், இன்னமும் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நடைபெறவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்த முடியாமல் கமல்ஹாசன் சிரமப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

ஷூட்டிங் முடியல
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை தொடங்கி மாலைக்குள் ஒரே மூச்சாக முடிந்து விடும். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங்கே மாலை 5 மணிக்குத் தான் நிறைவு பெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சோபாவில் அமர்ந்து
கொரோனா தொற்று பாதிப்பு சரியான நிலையில், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவசர அவசரமாக தொகுத்து வழங்க முடிவு செய்த கமல் இவிபி பிலிம் சிட்டிக்கு இன்று ஷூட்டிங்கிற்காக வந்தார். சனிக்கிழமை நிகழ்ச்சியை முடிக்கவே முடியாமல் சிரமப்பட்ட அவர் சோபாவில் உட்கார்ந்து எல்லாம் ஷோவை நடத்தியதை பார்த்து பிக் பாஸ் குழுவே கஷ்டப்பட்டதாக கூறுகின்றனர்.

பாதியில் கிளம்பிய கமல்
சனிக்கிழமைக்கான எபிசோடு ஷூட்டிங் முடிந்த நிலையில், கமல் தரப்பு ஓய்வெடுக்க கிளம்புவதாக அறிவித்ததும் பிக் பாஸ் ஞாயிற்றுக் கிழமை ஷூட்டிங்கை நாளை காலை இதே போல வைத்து முடித்துக் கொள்ளலாம் என பிக் பாஸ் குழு முடிவு செய்த அங்கிருந்து உடனடியாக கமல் கிளம்பி சென்று விட்டதாக கூறுகின்றனர்.

பிளானே அப்படி தான்
கமல்ஹாசனே ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு பாதியில் கிளம்பி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய உடல் நலன் கருதி இந்த வாரம் ஷோவையே இரு பிரிவுகளாக நடத்தி கொள்ளலாம் என பிக் பாஸ் குழுவே முடிவு செய்து தான் சனிக்கிழமை எபிசோடை மட்டும் இன்று நடத்தியதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஃபர்ஸ்ட் சேவ்
சனிக்கிழமை எபிசோடில் ஒருவரை முதல் நபராக கமல் காப்பாற்றி விட்டு செல்வார். இந்த வாரம் ராஜு பாய் நாமினேஷனில் வந்ததில் இருந்தே அன் அஃபிஷியல் போலிங்கில் அவர் தான் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வந்தார். இன்று நடைபெற்ற ஷூட்டிங்கிலும் ராஜு தான் முதல் நபராக காப்பாற்றப்பட்டார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

எவிக்ஷன் ஷூட்டிங் இன்னும் நடக்கல
அதே சமயம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அபிஷேக் ராஜா தான் வெளியேறினார் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், நாளை மதியம் தான் அதற்கான ஷூட்டிங்கே நடைபெறும் என்றும் எவிக்ஷன் ஷூட்டிங் இன்னமும் நடைபெறவில்லை என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











