குணா படமே ஹாலிவுட் படத்தின் காப்பியா? கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்!

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகும். இத்திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் அனைவரின் பார்வையும் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தின் மீது திருப்பி உள்ளது. இந்த படத்தி ரீ ரிலீஸ் செய்ய வேண்டு என பேச்சு எழுந்துள்ள நிலையில், குணா படமே ஹாலிவுட் படத்தின் காப்பி என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு பொதுவாக மலையாள படத்தை பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த வாரம் தியேட்டரில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கி உள்ளார்.

Is Kamal Haasan starrer Guna a copy of Hollywood movie

மஞ்சும்மல் பாய்ஸ்: கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு 11 நண்பர்கள் சுற்றுலா வருகிறார்கள். அவர்களில் ஒருவன், அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் அவர் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை. இதில், சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட். இந்த படம் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

குணா குகை: 1991ம்ஆண்டுக்கு முன் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட இந்த குகை குணா படத்தின் பின் குணா குகை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில், முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் இந்த பகுதியில் தான் கமல்ஹாசன் தனது குணா படத்திற்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார். சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான குணா படம் கமல்ஹாசனின் நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், வசூலில் தோல்வியை சந்தித்தது.

ஹாலிவுட் படத்தின் காப்பி: குணா குகை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியாகியுள்ள மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பிறகு குணா படத்தின் மீதான தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என பேச்சு அடிப்பட்டு வரும் நிலையில், சினிமா பிரபலம் ஒருவர், ஹாலிவுட்டில் Sweet Hostage என்ற படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாயகன் நாயகியை கடத்தி சென்று லவ் டார்ச்சர் செய்வார். நாயகனின் திறமையையும் காதலையும் கண்டு இறுதியில் நாயகி அவரையே திருமணம் செய்து கொள்வார். இந்த கதையைத்தான் குணாவிலும் எடுத்து உள்ளார் கமல் என சினிமா ஆர்வலர் சத்தியேந்திரா கூறியுள்ளார். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது குணா படம் காப்பியா என்றும் இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே என்றும் இணையவாசிகள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X