தலைமைக்கு தடங்கல் செய்யக் கூடாது.. அண்ணாச்சி மூலமாக மீண்டும் அரசியல் பேசிய கமல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வர வர டபுள் மீனிங்கில் கமல் அரசியல் பேசுவதே இல்லை என ஏங்கிய ரசிகர்கள் சனிக்கிழமை எபிசோடில் மறைமுகமாக அரசியல் கருத்துக்களை முன் வைத்துள்ளார் கமல் என ஒரு கருத்து பார்க்கப்படுகிறது.
தலைமைக்கு தடங்கல் செய்யக் கூடாது. புதிய தலைமையை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கமல் பேசியது அண்ணாச்சியை வைத்து அரசியல் கருத்துக்களை தான் கமல் பேசினார் என விவாதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் தான் ரெடி என்பதையே இதன் மூலம் உணர்த்துகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இமான் நிரூப் பிரச்சனை
இமான் அண்ணாச்சியின் கேப்டன்சியை நிரூப் காயின் யூஸ் பண்ணி பறித்துக் கொண்ட நிலையில், நீ பயந்துட்ட என இமான் அண்ணாச்சி சொன்னதும் நிரூப் கேப்டனாக மாறிய பின்னர் புதிதாக சில விதிகளை கொண்டு வர அவர் முயற்சி பண்ணும்போது அதனை அண்ணாச்சி ஆதங்கத்தால் மறுத்து பிரச்சனை பண்ண பஞ்சாயத்தை எடுத்து முதலிலேயே பேச ஆரம்பித்தார் கமல்.

இமானுக்கு பாராட்டு
நாகேஷ் முதல் ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்களை கமலுக்கு மிகவும் பிடிக்கும். இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு மீது அவர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம் காட்ட அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது. இந்த வயதில் ஸ்கூல் பையனாகவும், கேப்டன்சி டாஸ்க்கில் மற்றவர்களை முந்தி கோபுரத்தை அடுக்கி வெற்றி கண்ட இமான் அண்ணாச்சிக்கு கமல் பாராட்டுக்களை தெரிவித்து பின்னர் பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.

தடங்கல் பண்ணாதீங்க
கேப்டனாக மாறிய நிரூப் பிரியங்கா, அபிஷேக் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு சில பவர்களை கொடுத்து மீண்டும் ஆளுமை டாஸ்க்கை அரங்கேற்றலாம் என பிளான் பண்ணும் போதே இமான் அண்ணாச்சி நீ சொல்றதை எல்லாம் கேட்க முடியாது என சண்டை பிடித்தார். புதிதாக வரும் தலைமை தப்பா தான் இருக்கும் என நினைத்து தடங்கல் பண்ணாதீங்க என்று அண்ணாச்சிக்கு சொல்வது போல அரசியல் பேச ஆரம்பித்து விட்டார் கமல் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

சொந்த கட்சிக்காக அறிவுரையா
இது மக்களுக்கான அறிவுரையா அல்லது சொந்த கட்சிக்கான அறிவுரையா கமல் சார் என்றும் சில நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கிடைக்கிற கேப்பில் மீண்டும் டபுள் மீனிங்கில் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார் ஆண்டவர் என பிக் பாஸ் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











