For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்தியாவுக்கே பிரைம் மினிஸ்டர்ன்னு நினைப்பு.. மொட்டை தாத்தாவை வச்சு தேசிய அரசியல் பேசினாரா கமல்?

  |

  சென்னை: பிக் பாஸ் ஹவுஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி, இந்தியாவுக்கே பிரைம் மினிஸ்டர்ன்னு நினைச்சிகிட்டாரு என ஜித்தன் ரமேஷ் கிழித்து தொங்கவிட்டார்.

  ஏன் இதுவரை புகார் கடிதம் குறித்து நடிகர் கமல் பேசவே இல்லை என எதிர்பார்த்து ஏங்கிய ரசிகர்களின் கேள்விகளுக்கும் நேற்றைய எபிசோடில் விடை கிடைத்தது.

  தலைவர் பொறுப்பு கொடுத்தவுடன் சுரேஷுக்கு அதிகாரம் அதிகமானதாக சக போட்டியாளர்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர் என கமல் சொன்னதும் சுரேஷின் முகமே வாடி விட்டது.

  முதல் வார தலைவி

  முதல் வார தலைவி

  முதல் வாரமே புகார் பெட்டி வைக்கப்பட்டு, ரம்யா பாண்டியன் தலைமை குறித்து போட்டியாளர்கள் புகார்களை தெரிவித்தனர். ஆனால், யார் யார் என்ன சொன்னார்கள் என்பதை ரிவீல் பண்ணாமல், நீங்களே உங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள் என கமல் ரம்யாவை காப்பாற்றி விட்டார்.

  மொட்டை பாஸை விடல

  மொட்டை பாஸை விடல

  ஆனால், இரண்டாவது வார தலைவரான நம்ம மொட்டை பாஸ் சுரேஷை நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் விட வில்லை. எவிக்‌ஷன் துப்பாக்கியை வைத்திருக்கும் இடத்தில் இருந்து, புகார் கடிதத்தை எடுத்த கமல், தலைவர் பதவி கிடைத்ததும் சுரேஷுக்கு அதிகாரம் அதிகமாகிடுச்சு என ஹவுஸ்மேட்கள் எழுதி உள்ளனர் என போட்டுடைத்தார்.

  சைலன்ட்டான சுரேஷ்

  சைலன்ட்டான சுரேஷ்

  அதுமட்டுமில்ல, மேலும், சிலர் கடந்த 2 நாட்களாக சத்தம் ஏதும் காட்டாமல் சுரேஷ் சக்கரவர்த்தி சைலன்ட்டாக ஆளே மாறிவிட்டார் என்றும் புகார் பெட்டியில் எழுதியுள்ளனர். ஒருவேளை அர்ச்சனா வந்ததுக்கு அப்புறமோ என்றும் கமல் சுரேஷை செமையா சீண்டியதை பார்த்த ரசிகர்களும், போட்டியாளர்களும் நல்லா என்ஜாய் பண்ணாங்க.. குறிப்பா நம்ம ரியோ ஹேப்பி அண்ணாச்சி.

  டபுள் மீனிங்

  டபுள் மீனிங்

  அதிலும், ஒருத்தர் எழுதுன கடிதத்தை பத்தி நான் பேசுனேனா டபுள் மீனிங் என சொல்லிடுவீங்க, அதை அவரே அவர் வாயால சொல்லட்டும் என ஜித்தன் ரமேஷை எழுப்பி, நீங்க என்ன எழுதுனீங்கன்னு சொல்லுங்க என நேரடியாகவே சுரேஷுக்கும் ஜித்தனுக்கும் மூட்டி விட்டு எஸ்கேப் ஆகிட்டார் கமல்.

  மனசுல பிரைம் மினிஸ்டர்ன்னு நினைப்பு

  மனசுல பிரைம் மினிஸ்டர்ன்னு நினைப்பு

  கமல் சொன்னதும், உடனடியாக எழுந்த ஜித்தன் ரமேஷ், பிக் பாஸ் வீட்டுக்கு அவரை தலைவரா நிறுத்துனா, அவர் என்னவோ இந்தியாவுக்கே பிரைம் மினிஸ்டர் மாதிரி நினைச்சிகிட்டு எங்கள ரூல் பண்ணாரு. அந்த டீம் சரியில்லை, இந்த டீம் சரியில்லைன்னு சொன்னாரு, ஆனால், கிச்சன் டீம் பத்தி எதுமே சொல்லல, அவரே சமைச்சிட்டு இருந்தாரு என கிழித்துத் தொங்கவிட்டார்.

  தேசிய அரசியல்

  தேசிய அரசியல்

  மொட்டை தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து பேசுவது போல, உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய அரசியலை நுழைத்து பேசுகிறார் என்றே அந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீங்க சொல்றத பார்த்தா, நீங்க சொல்றது எதும் கேட்டுக்க மாட்டுங்கறாரு, அவரா முடிவெடுத்து டக்குன்னு செஞ்சிடுறாரு.. அப்படியே நம்மை குறைகளை சொன்னா கூட சப்ஜெக்ட்டை மாத்திடுறாரு என மோடியை மறைமுகமாக விமர்சிப்பது போலவே கமல் பேசினார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஓஹோ, இதுதான் அந்த டபுள் மீனிங்கா?

  கோபத்தை அடக்க

  கோபத்தை அடக்க

  அப்படியே அரசியலுக்குள் போகாமல் மீண்டும் சாமர்த்தியமாக கமல் பிக் பாஸுக்குள் வந்து, சுரேஷ் சக்கரவர்த்தி ஏன் அமைதியாகிட்டீங்க என்று அவரை பேச வைத்தார். 2 நாளா ஏன் அமைதியா இருக்கேன்னா, இவங்க சொன்ன அட்வைஸ் கேட்டு, கோபத்தை அடக்க முயற்சி பண்றேன், கேபியை தூக்கியதால் ஏற்பட்ட கை வலி என பேச அப்படியே கேபி, சுரேஷ் டாஸ்க் பக்கம் நிகழ்ச்சி சென்றது. மொட்டை தாத்தாவை இப்படி அமைதியா பார்ப்பதை ரசிகர்கள் யாரும் விரும்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Kamal Haasan well using Suresh Chakarvarthy and criticize central politics in latest episode of Bigg Boss Tamil 4 housemates complaint box task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X