அந்த இயக்குனர் சொன்ன அசத்தல் கதை... ஒன்றாக மீண்டும் நடிப்பார்களா கமலும் ரஜினியும்?

By

சென்னை: பிரபல இயக்குனரின் படத்தில் நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம், கடந்த 9 ஆம் தேதி வெளியானது. இதில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.

லைகா தயாரித்த இந்தப் படத்தை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

குஷ்பு, மீனா

குஷ்பு, மீனா

இதில், நடிகர் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது.

கலைப்புலி எஸ்.தாணு

கலைப்புலி எஸ்.தாணு

அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது. அந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு செய்திகள் முன் வெளியாயின. ஆனால், இதை இயக்குனர் கே.வி.ஆனந்த் மறுத்தார். தாணுவும் மறுத்திருந்தார்.

அண்ணாத்த, வியூகம்

அண்ணாத்த, வியூகம்

இந்நிலையில் ரஜினிகாந்தின் 168-வது பட டைட்டில் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தலைப்பு வைரலானது. மன்னவன் என்ற அந்த டைட்டிலைத்தான் படத்துக்கு வைத்துள்ளதாக ரசிகர்கள் தெரித்து வந்தனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் அண்ணாத்த, வியூகன் என்ற டைட்டில்களையும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

ராஜ்கமல் இன்டர்நேஷனல்

ராஜ்கமல் இன்டர்நேஷனல்

இதற்கிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இதை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. லோகேஷ், இப்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து கமல் நடிக்க அவர் கதை சொன்னதாகவும் அதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வந்தன.

தியாகராஜா குமாரராஜா

தியாகராஜா குமாரராஜா

இந்நிலையில் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா கமல்ஹாசனிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். இரண்டு ஹீரோ கதையான இதை, ரஜினிக்கும் கமலுக்கும் முக்கியத்துவம் கொண்டது போல அமைத்திருக்கிறாராம். இந்தப் படத்தை தயாரிப்பதா அல்லது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிப்பதா என்று யோசனையில் கமல் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X