ரஜினியை இயக்க காத்திருக்கும் அடுத்த டைரக்டர் இவர் தான்...ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை : டைரக்டர் தேசிங்கு பெரியசாமி கடந்த ஆண்டு இயக்கிய ரொமான்ஸ் கலந்த காமெடி படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு ரஜினியும் அந்த டைரக்டரை அழைத்து, அவரின் ஸ்மார்ட் ஒர்க்கையும், வெற்றி பயணம் தொடரவும் பாராட்டினார்.

இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், டைரக்டர் தேசிங்கு பெரியசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக கதை ஒன்றை தயாரித்துள்ளார். ஆனால் இது பற்றி ரஜினியை சந்தித்து அவர் பேசியதாக டைரக்டர் தரப்பிலும், ரஜினி தரப்பிலும் எந்த தகவலும் இல்லை.
சமீப காலமாக தனது திட்டத்தை மாற்றி வரும் ரஜினி, வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து நடித்து வருகிறார். அதனால் டைரக்டர் தேசிங்கு பெரியசாமியின் கதைக்கும் ரஜினி விரைவில் ஓகே சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அண்ணாத்த படத்தை தொடர்ந்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜூடன் இணைந்து புதிய பணியாற்ற உள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினி பிஸியாக இருந்து வருகிறார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அண்ணாத்த சூட்டிங் அடத்த மாதம் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அண்ணாத்த சூட்டிங் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு, அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் தயாராகி வருவது கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











