இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனைவி நடிகையா... அதுவும் இத்தனை படங்களில் நடிச்சிருக்காங்களா!
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் பெயர் போனவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் தற்போது ஓடிடியில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் மனைவியும் ஒரு நடிகை, அவரது பல படங்களில் நடித்துள்ளார் என்ற தகவல் புகைப்படத்துடன் தீயாய் பரவி வருகிறது.

ஜிகர்தண்டா தேசிய விருதை
2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து இயக்கிய ஜிகர்தண்டா தேசிய விருதை தட்டித்தூக்கியது.

அல்வா சாப்பிடுவது போல
தரமான கேங்க்ஸ்டர் கதைகளை அல்வா சாப்பிடுவது போல இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் இப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட-யை தொடர்ந்து தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தையும் இவர் இயக்கி இருக்கிறார்.

ஹாலிவுட் தரத்தில்
பெரும்பான்மையான காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டு ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரையரங்குகளில் வெளியாகும் சூழ்நிலை இல்லாததால் ஓடிடியில் நேரடியாக சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. முற்றிலும் வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
இப்பொழுது நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் இணைந்து நடித்து வரும் சீயான் 60 இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்ய பிரேமா ஒரு நடிகையும் இவரது பல படங்களில் நடித்துள்ளார் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறைவி மற்றும் பேட்டா உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ள சத்ய பிரேமா இப்போது வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுவரை பலரும் அறிந்திராத இந்தத் தகவல் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











