என்ன சொல்றீங்க...கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியின் தங்கையா ?

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பு திறமையால் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இவர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் ஒன்று பரவி உள்ளது.

இந்நிலையில் குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக, ராணி போன்ற உடை அணிந்த அவரின் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேசும் இணைந்திருப்பதாக தகவல் பரவியது.

குந்தவையாக கீர்த்தி சுரேஷ்

குந்தவையாக கீர்த்தி சுரேஷ்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில், அருள் மொழி வர்மனின் தங்கையாக நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறாராம். இதனால் ஜெயம் ரவியின் தங்கை வேடகத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

இந்த தகவல் பரவியதில் இருந்தே கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் அவர் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் இருக்கும் இந்த போஸ்டர் தொடர்பாக பல விதமாக யூகமான தகவல்களும் வெளியாக துவங்கி விட்டன.

எங்களுக்கு இதில் தொடர்பில்லை

எங்களுக்கு இதில் தொடர்பில்லை

இதனையடுத்து பொன்னியின் செல்வன் பட நிறுவனத்தின் சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர் ஒருவர் உருவாக்கிய படம். இது அவரின் சொந்த விருப்பமாக இருக்கலாம். ஆனால் இதற்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

 பொன்னியின் செல்வன் மெகா ஸ்டார்கள்

பொன்னியின் செல்வன் மெகா ஸ்டார்கள்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X