இளம் விளையாட்டு வீரருடன் டேட்டிங் செய்யும் சூப்பர் மாடல்.. பற்றி எரியும் புது காதல் கதை!
: சர்வதேச சூப்பர் மாடலான கெண்டல் ஜென்னர் பிரபல விளையாட்டு வீரருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.
இன்ஸ்டாகிராம் அழகி, இளம் பெண் தொழிலதிபர், சூப்பர் மாடல் என பல புகழுக்கு சொந்தக்காரர் கெண்டல் ஜென்னர்.
24 வயதாகும், அவர், 23 வயதான கூடை பந்து விளையாட்டு வீரர் டெவின் பூக்கருடன் டேட்டிங் செய்து வருகிறாராம்.

சூப்பர் மாடல்
அமெரிக்க டிவி பிரபலமான கெண்டல் நிக்கோல் ஜென்னர் கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் கிம் கர்தாஷியன் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். சர்வதேச சூப்பர் மாடலாக வலம் வரும் இவர், இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை ஏதும் செய்து கொள்ளாத நேச்சுரல் பியூட்டி என்ற பாராட்டை பெற்று வருகிறார்.

இத்தனை கோடி ரசிகர்களா
இன்ஸ்டாகிராமில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளாமர் போஸ்ட்டுகளை போட்டுள்ள இவருக்கு 137 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் கிம் கர்தாஷியனுக்கு அடுத்தபடியாக அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள சூப்பர் மாடலாக கெண்டல் ஜென்னர் திகழ்ந்து வருகிறார். உலகின் புகழ்பெற்ற மேகசின் இதழ்களின் அட்டைப் படங்களில் எல்லாம் இவர் அலங்கரித்துள்ளார்.

விளையாட்டு வீரருடன்
மாடல் அழகியாக மட்டுமின்றி மிகப்பெரிய பெண் தொழிலதிபராகவும் பல கோடிகளுக்கு அதிபராகவும் இருந்து வரும் கெண்டல் ஜென்னர், அவரை விட ஒரு வயது இளம் கூடை பந்து விளையாட்டு வீரர் டெவின் பூக்கர் என்பவருடன் கடந்த மூன்று நாட்களாக மாலிபு தீவில் ஒன்றாக சுற்றுலா செய்து வரும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்கின்றனர் என்றும் ரசிகர்கள் பற்ற வைத்துள்ளனர்.

வாணவேடிக்கை
கெண்டல் ஜென்னர் மலிபு கடற்கரையில் தனது சுற்றுலாவை கொண்டாடி வரும் நிலையில், கடற்கரையில் வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ரசிகர்கள், உங்களுக்கும் அந்த விளையாட்டு வீரருக்கும் எப்போ கல்யாணம் என கமெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லைக் போட்ட கிம் கர்தாஷியன்
கடற்கரையில் வாணவேடிக்கைகளை உற்சாகமாக வேடிக்கை பார்த்து வரும் கெண்டல் ஜென்னரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த கிம் கர்தாஷியன் தனக்கு பிடித்த fireworks எமோஜியை பதிவிட்டுள்ளார். வெறும் 7 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் கெண்டல் ஜென்னரின் இந்த பதிவுகளுக்கு லைக் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











