வாரிசு நடிகையின் தோழியை காதலிக்கிறேனா?: கே.எல். ராகுல் விளக்கம்
மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நெருங்கிய தோழியை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
கே. எல். ராகுல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தியாவில் அவரின் காதல் பற்றி தீவிரமாக பேசப்பட்டது. அவரும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதையாவும் காதலிப்பதாக கூறப்பட்டது.

மேலும் ராகுலும், அதையா ஷெட்டியும் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. ஆனால் தற்போதோ அந்த புகைப்படத்தில் இருக்கும் மற்றொரு பெண்ணான பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நெருங்கிய தோழியான ஆகான்ஷா ரஞ்சனை தான் ராகுல் காதலிப்பதாக தற்போது கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ராகுல் கூறியதாவது,
ஓ, என்னை பற்றி இப்படி எல்லாம் எழுதப்பட்டுள்ளதா? நான் செய்தித்தாள்களை பார்ப்பது இல்லை. அதனால் அதில் என்னை பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாது. என் தனிப்பட்ட வாழ்க்கையை பர்சனலாக வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். நான் தற்போது கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.
ராகுலின் பெயர் ஆகான்ஷாவுடன் சேர்ந்து அடிபடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராகுலின் பெயர் நடிகைகள் நிதி அகர்வால், சோனல் சவுகன் உள்ளிட்டோருடன் சேர்ந்து அடிபட்டது.


Click it and Unblock the Notifications











