twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திமுகவுக்கு எதிராக சினிமாக்காரர்கள் செய்யும் உள்ளடி வேலை!

    By Shankar
    |

    சென்னை: நேரில் பார்க்கும்போது இந்திரனே, சந்திரனே, வள்ளலே என்று புகழ்வதும், தலை மறைந்ததும் பெரிய குழியாகத் தோண்டி வைப்பதும் சினிமாக்காரர்களுக்கு கைவந்த கலை.

    இப்போது இந்தக் கலைதான் ஜரூராக அரங்கேறிக் கொண்டுள்ளது கோடம்பாக்கத்தில்.

    இந்த திமுக ஆட்சியில் வேறு எல்லாதரப்பினரையும் விட அதிக அளவு சலுகைகளை அனுபவித்தவர்கள் சினிமாக்காரர்கள்தான். சதா சர்வகாலமும் முதல்வர் அலுவலகம், இல்லம் இவர்களே நீக்கமற நிறைந்து நின்றார்கள். சினிமாக்காரர்களுக்கு தனி வாரியம், இலவச வீட்டு மனை, புதிய ஸ்டுடியோக்கள், எக்கச்சக்க வரிவிலக்கு, குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நிதி உதவி, மானியம், படப்பிடிப்பு தளங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் என ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தந்தது கருணாநிதியின் அரசுதான்.

    இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல படங்களை, குறைந்த செலவில் தயாரித்து வெளியிட ஒருவருக்கும் திராணியில்லாமல் போய்விட்டது. நல்ல தமிழில் பெயர் வைத்து குப்பைப் படங்களைத்தான் இதுவரை தந்து வருகிறார்கள், சிறிய தயாரிப்பாளர்கள் எனும் பிரிவினர்.

    இந்த நிலையில், இத்தனை சலுகைகளையும் அனுபவிக்கும் திரைப்படத் துறையின் ஒரு பிரிவினர், திமுக அரசுக்கு எதிராக சத்தமில்லாத பிரச்சாரத்தில் குதித்துள்ளதாகத் தெரிகிறது.

    கருணாநிதி குடும்பம் சினிமாவை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே இவர்களின் வாதம். "கருணாநிதியின் வாரிசுகளால் இந்த அளவு படம் எடுத்து அதை விற்கவும் முடியும் போது, மற்ற தயாரிப்பாளர்களையும் அப்படிச் செய்ய முடியாமல் தடுப்பது யார்? போட்டி நிறைந்ததுதானே வர்த்தக உலகம்" என்கிறார் ஒரு விநியோகஸ்தர்.

    படத் தயாரிப்பே குறைந்துவிட்டது என்றும் இந்த கும்பல் பிரச்சாரம் செய்கிறதாம். உண்மையில் கடந்த 5 ஆண்டுகளாக எக்கச்சக்க படங்கள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 150 நேரடித் தமிழ்ப் படங்கள் வந்துள்ளன. இது புதிய சாதனை. இந்த ஆண்டும் நிறைய படங்கள் வந்துவிட்டன. ஆனால் ஒன்றும் தேறவில்லை. இதற்கு கருணாநிதி குடும்பம் என்ன செய்யும்? நல்ல படம் எடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்களே? என்கிறார் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி.

    'இந்த மாதிரி உள்ளடி வேலைகள் எடுபடாது. நிச்சயம் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் அவரது ஆட்சியில் பலன் பெற்றவர்கள். சில பத்திரிகைகள்தான் இப்படி கருத்துக்களைத் திரித்து வெளியிடுகின்றன. அவர்களை நம்ப வேண்டாம். அவர்களின் லாபத்துக்காக வெளியிடப்படும் செய்திகள் அவை,!' என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.

    பார்க்கலாம்!

    English summary
    Sources revealed that some of the film personalities silently turned against the DMK in this election and canvassing for ADMK. But DMK supporters strongly believed that nothing would happened and DMK is going to win the election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X