வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா?
சென்னை: ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம், தர்பார். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.
லைகா தயாரித்த இந்தப் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில், தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

குஷ்பு, மீனா
இதில் நடிகர் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு
இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது. அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

கே.வி.ஆனந்த்
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக செய்திகள் பரவுகின்றன. இதுபற்றி கே.வி.ஆனந்திடம் கேட்டபோது, அவர் மறுத்தார்.

கலைப்புலி எஸ்.தாணு
இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இது உண்மைதானா? என்று அவரிடம் கேட்டபோது, இல்லை என்றார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும் ரஜினி நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.


Click it and Unblock the Notifications











