பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதானாமே.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறாரா சிம்பு?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கார்த்தி நடித்த 'கைதி' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம், மாஸ்டர்.
இதில் விஜய் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் இசை
மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இது, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரிலீஸ் ஒத்திவைப்பு
அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

கமல் நடிக்கும் படம்
தியேட்டர் எப்போது திறக்கப்படுமோ, அப்போது படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், கமல் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை
டிசம்பரில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, ராஜ்கமல் நிறுவனத்துக்காக, சிம்பு நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இது பற்றி விசாரித்தபோது, 'லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். அது அதோடு முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.

உண்மை இல்லை
அதனால் லோகேஷ் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது சிம்பு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதை வெங்கட்பிரபு இயக்குகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயின். எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா, உள்பட பலர் நடிக்கின்றனர்.

சுதா கொங்கரா
இந்தப் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் சிம்பு நடிக்க இருப்பதாகச் செய்திகள் பரபரப்பாக வெளியாயின. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இவை எதுவும் உறுதியாகவில்லை.


Click it and Unblock the Notifications











