லாஸ்லியாவுக்கு விவாகரத்துன்னு பேச்சு கிளம்பியது எப்படி?: என்ன காரணம் தெரியுமா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: உண்மையை சொன்ன லோஸ்லியாவின் தோழிகள்

சென்னை: லாஸ்லியா விவாகரத்தானவர் என்ற பேச்சு எப்படி கிளம்பியது என அவரின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று அவருக்கு தெரிந்த ஒருவர் கூறினார். இதையடுத்து லாஸ்லியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு உண்மையிலேயே விவாகரத்து ஆனதா இல்லையா என்பது குறித்து அவரின் தோழிகள் இருவர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது,

ஜாலியானவர்

ஜாலியானவர்

லாஸ்லியா ரொம்ப ஜாலி டைப். அவரை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வேகத்தில் ட்விட்டரில் அவருக்கு ஆர்மி துவங்கியுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். லாஸ்லியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படி இருக்கும்போது விவாகரத்து எப்படி நடந்திருக்க முடியும்?. லாஸ்லியாவின் உண்மையான தோழி யாரும் அவரைப் பற்றி இப்படி பேச மாட்டார்கள். இது போன்ற வதந்திகளை பார்க்க கவலையாக உள்ளது.

காதல்

காதல்

லாஸ்லியா பள்ளியில் படித்தபோது அவரிடம் நிறைய பையன்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர் யாரையும் ஏற்கவில்லை. இதனால் கூட அவருக்கு விவாகரத்தாகிவிட்டதாக வதந்தியை கிளப்பிவிட்டிருக்கலாம். லாஸ்லியாவுக்கு வீட்டில் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் நடிக்கத் தெரியாது என்கிறார்கள் தோழிகள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

லாஸ்லியா அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தார். இந்நிலையில் அவரை கவினுடன் நெருங்கிப் பழக வைத்து சாக்ஷியை கடுப்பேற்றி பார்க்கிறார் பிக் பாஸ். சாக்ஷி கோபப்பட்டதால் இனி நீ என்னுடன் கதைக்க வேண்டாம் என்று கவினிடம் கூறி அழுகிறார் லாஸ்லியா. சிரித்துக் கொண்டே இருந்த பிள்ளையை இப்படி அழ வைத்துவிட்டீர்களே பிக் பாஸ் என்கிறார்கள் லாஸ்லியா ஆர்மிக்காரர்கள்.

காப்பி

காப்பி

அனைவரிடமும் நட்பாக பழகி வரும் லாஸ்லியாவை கவினிடம் மட்டும் நெருங்கிப் பழக வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். லாஸ்லியா எதற்கெடுத்தாலும் ஓவியா போன்று இடத்தை காலி செய்துவிட்டு கிளம்புவது நெட்டிசன்களுக்கு பிடிக்கவில்லை. லாஸ்லியா நீங்கள் நீங்களாகவே இருங்கள், ஓவியாவாக நடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X