கவினுடனான காதலை தவறு என்கிறாரா லாஸ்லியா? புதிய போட்டோ ஷுட் கேப்ஷன பாத்தீங்களா!

சென்னை: நடிகை லாஸ்லியா நடத்தியுள்ள புதிய போட்டோ ஷுட்டுக்கு கொடுத்துள்ள கேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள் கவினுடனான காதல் பற்றியா சொல்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை செய்தி வாசிப்பாளரான நடிகை லாஸ்லியா கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

இதன் தொடர்ச்சியாக லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகை லாஸ்லியா.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து அண்மையில் அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வரும் லாஸ்லியா, அதனை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகிறார்.

ஓவர் மேக்கப்

ஓவர் மேக்கப்

அந்த வகையில் அண்மையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை லாஸ்லியா, அதில் லைட் நீல நிற ஷர்ட் மற்றும் பாவாடை அணிந்துள்ளார். மேலும் ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார். அந்த உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

ஆகாதும்மா..

ஆகாதும்மா..

அதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த போட்டோ ஷுட் சத்தியமா நல்லா இல்லை என முகத்தில் அடித்தாற்போல் கூறியுள்ளனர். மேலும் ஓவர் மேக்கப் முகத்திற்கு ஆகாதும்மா என்றும் அறிவுரை கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்கள் முகத்தில் இருந்த இயற்கை அழகு போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

காதலித்தேன்..

காதலித்தேன்..

மேலும் நடிகை லாஸ்லியா அந்த போட்டோவுக்கு நான் வாழ்ந்தேன், காதலித்தேன், இழந்தேன், தவறவிட்டேன், காயப்படுத்தினேன், நம்பினேன், மேலும் தவறுகளையும் செய்தேன், ஆனால் இவை எல்லாவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்டேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கவினுடனான காதலா?

கவினுடனான காதலா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்ததையா கூறுகிறீர்கள் என கேட்டுள்ளனர். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சக போட்டியாளரான கவினை காதலித்தார். கவினுடனான லாஸ்லியாவின் காதல் அவரது பெற்றோருக்கு பிடிக்காத போதும், அவரை தொடர்ந்து காதலித்தார்.

கதறி அழுத லாஸ்

கதறி அழுத லாஸ்

கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போதுகூட, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கதறி அழுது கெஞ்சினார். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அவருடன் பேசுவதை கூட தவிர்த்தார்.

பல்வேறு கேள்விகள்

பல்வேறு கேள்விகள்

இருவருக்கும் இடையிலான காதல் முறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது போட்டோவுக்கு போட்டுள்ள இந்த கேப்ஷன் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X