twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாமன்னன் கடைசி படமா...கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி பேசியது என்னது?

    |

    சென்னை :தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபுர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி நல்ல வரவேற்பை பெற்றது.

    இரண்டு நாட்களுக்கு முன் நெஞ்சுக்கு நீதி படம் 50 வது நாளை கடந்தது. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 40 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

    இது தவிர விக்ரமின் கோப்ரா, லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட், சிம்புவின் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களின் தமிழ்நாடு தியேட்டர் விநியோக உரிமையை பெற்று வருகிறார்.

    அரசியல், சினிமாவில் பிஸி

    அரசியல், சினிமாவில் பிஸி

    உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ ஆனதில் இருந்தே அவர் இனி சினிமாக்களில் நடிக்க மாட்டார், தீவிர அரசியலில் இறங்க போகிறார் என தகவல் பரவி வருகிறது. ஆனால் தற்போது வரை உதயநிதி, சினிமா - அரசியல் இரண்டையும் பேலன்ஸ் செய்து போய் கொண்டிருக்கிறார். அரசியலை போலவே சினிமாவிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

    மாமன்னன் உதயநிதியின் கடைசி படமா

    மாமன்னன் உதயநிதியின் கடைசி படமா

    இந்நிலையில் நேற்று நடந்த விக்ரமின் கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி கலந்து கொண்டார். இந்த விழாவில், தான் தற்போது நடித்து வரும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என உதயநிதி பேசியதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. இதனால் மீண்டும் பரபரப்பு கிளம்பியது.

     உதயநிதி அப்படி என்ன தான் பேசினார்

    உதயநிதி அப்படி என்ன தான் பேசினார்

    உண்மையில் உதயநிதி அப்படி என்ன பேசினார் என்றால், விக்ரம் படம் நிச்சயம் வசூலில் ரெக்கார்டு பிரேக் பண்ணும். இந்த படத்தில் விக்ரம் சார் 7 கெட்அப்களில் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். படம் மிக நன்றாக வந்துள்ளது. கமல் சாருக்கு விக்ரம் என்றால், விக்ரம் சாருக்கு கோப்ரா. விக்ரம் படத்தில் கமல் என்ன செய்தாரோ அதை தான் கோப்ராவில் விக்ரம் செய்திருக்கிறார்.

    கோப்ராவும் ஃபேன்பாய் சம்பவம்

    கோப்ராவும் ஃபேன்பாய் சம்பவம்

    விக்ரம் படம் எப்படி லோகேஷ் கனகராஜின் ஃபேன் பாய் சம்பவமாக இருந்ததோ, அதே போல் கோப்ரா படம் விக்ரம் சாரின் தீவிர ரசிகரான அஜய் ஞானமுத்துவின் ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும். வந்ததில் இருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அனைவரும் ஐ லவ் யு விக்ரம் சார் என கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்பாக நானும் சொல்கிறேன், ஐ லவ் யு விக்ரம் சார் என்றார்.

    Recommended Video

    இந்த காரணத்துக்காக தான் பண்ணல | Udhayanidhi Speech | Don Success Meet *Kollywood | Filmibeat
     அடுத்து நடிக்க போகிறாரா உதயநிதி

    அடுத்து நடிக்க போகிறாரா உதயநிதி

    மாமன்னன் படம் பற்றியோ, அது தனது கடைசி படம் என்றோ உதயநிதி குறிப்பிடவில்லை. அதே சமயம் நெஞ்சுக்கு நீதி 50வது நாள் விழாவில் பேசிய உதயநிதி, தற்போது மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறேன். அருண்ராஜா காமராஜுடன் மற்றொரு படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதற்கு முன்பும் தான் தொடர்ந்து நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    English summary
    Is Maamannan was Udhayanidhi Stalin's last movie...what he spoke in Cobra audio launch event Some sources said that Udhayanidhi Stalin confirmed in Cobra audio launch event that Maamannan is his last movie. But actually Udhayanidhi in his speech, he compaired Kamal's Vikram movie with Vikram's Cobra movie. Cobra will definetly become a record breaking movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X