5 மொழிகளில் உருவாகும் படம்.. இந்த ஹீரோவுக்கு வில்லன் ஆகிறாரா பிரபல நடிகர் மாதவன்..? பரவுது தகவல்!
சென்னை: பிரபல ஹீரோ மாதவன், 5 மொழிகளில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video
பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். 'அலா வைகுந்தபுரம்லோ' பட ஹிட்டுக்கு பிறகு புஷ்பா என்ற படத்தில் நடித்துவருகிறார்.
சுகுமார் இயக்குகிறார். அல்லு அர்ஜுனும் சுகுமாரும் ஏற்கனவே ஆர்யா, ஆர்யா 2 படங்களில் இணைந்திருந்தனர்.

ராஷ்மிகா மந்தனா
அந்தப் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இதில் இணைகின்றனர். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இதில் அவர் சித்தூர் பகுதியை சேர்ந்தவராக நடிக்கிறார். அதனால், அந்த பகுதி, பேச்சு வழக்கை பேசி பயிற்சி எடுத்து வருகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

விஜய் சேதுபதி
பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கொரோனா பரவல்
அதற்குள் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னை ஏற்படும் என்று அவர் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கன்னட ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

மாதவன் வில்லன்
தமிழ் நடிகர் பாபி சிம்ஹாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில் நடிகர் மாதவன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தெலுங்கு சினிமா துறையில் பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. மாதவன் ஏற்கனவே, நாக சைதன்யாவின் சவியாசசி என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அனுஷ்கா ஷெட்டி
இந்தப் படத்திலும் வில்லனாக நடிக்க அவர் சம்மதித்துவிட்டதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் மாதவன், தற்போது சைலன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இது வரும் வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதில் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











