மனோபாலாவுடன் ஜோடி போடுகிறாரா மாளவிகா? அதுவும் அந்த நடிகர் படத்திலா? குஷியில் ரசிகர்கள்!
சென்னை: மாளவிகா என்றதும் மாஸ்டர், மாறன் பட மாளவிகா மோகனன் என நினைத்து விட வேண்டாம். கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என தமிழ்நாட்டையே கலக்கிய 'திருட்டுப் பயலே' மாளவிகா.
நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மற்றும் நடிகர் ஜீவாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஜீவா படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பக்காவான என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் மாளவிகா என தகவல்கள் கிளம்பி உள்ளன.

அஜித் படத்தில் அறிமுகம்
இயக்குநர் சுந்தர் சியின் உன்னைத் தேடி படத்தின் முலம் 1999ம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல் ராஜா, அய்யா, சந்திரமுகி திருட்டுப் பயலே, என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர் மாளவிகா. கடைசியாக 2008ம் ஆண்டு சுந்தர் சியின் ஆயுதம் செய்வோம் படத்தில் நடித்த மாளவிகா அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
2000ம் ஆண்டு இயக்குநர் சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி நடிப்பில் வெளியான வெற்றிக் கொடிகட்டு படத்தில் அமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மாளவிகா. அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்னும் கூட மாளவிகா என்றால் சட்டென ரசிகர்களுக்கு அந்த பாடல் தான் நினைவுக்கு வரும்.

சினிமாவுக்கு ரெஸ்ட்
ஸ்வேதா கொன்னூர் மேனன் சினிமாவில் மாளவிகா எனும் பெயரில் நடித்து வந்தார். பெங்களூருவை சேர்ந்த மாளவிகா கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்தார். அதன் பிறகு குழந்தைகள், குடும்பம் என வந்த நிலையில், சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார் மாளவிகா. ஆனால், அவ்வப்போது சோஷியல் மீடியாவில் அவர் பதிவிடும் ஹாட்டான போட்டோக்கள் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சுந்தர் சி படத்தில்
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அறிமுகமான மாளவிகா மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன. கோல்மால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்து வருகிறார். ஏகப்பட்ட ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தில் தான் மாளவிகா தற்போது நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மானோபாலாவுக்கு ஜோடியா
சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் படங்களில் முன்னாள் கதாநாயகிகள் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், முக்கிய கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். கிரண், ராய் லக்ஷ்மி, பூனம் பஜ்வா என பல நடிகைகள் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், ஜீவாவின் புதிய படத்தில் மாளவிகா இணைந்துள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் தற்போது மனோபாலாவுடன் மாளவிகா இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனோபாலாவுக்கு ஜோடியா? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











