பிரபல தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மம்முட்டி.. பரபரக்கும் டோலிவுட்!

சென்னை : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இப்பொழுது பீஷ்ம பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்து ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் இப்பொழுது தெலுங்கில் பிரபல திரைப்படமொன்றில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நாகார்ஜுனாவின் மகன்

நாகார்ஜுனாவின் மகன்

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் அகில் அக்கினேனி. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சுட்டிக்குழந்தை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அகில் என்ற படத்தில் நடித்து 2015ஆம் ஆண்டு கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் கவனத்தைப் பெற்று வெற்றி அடைந்தது.

 மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்

ஹலோ, மிஸ்டர்.மஞ்சு என அகில் நடித்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபீசை கலக்கிய நிலையில் இப்பொழுது பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே உடன் இணைந்து மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற படத்தில் நடித்துள்ளார். திகட்டாத காதல் கதை களத்தை கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏஜென்ட்

ஏஜென்ட்

இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் ஏஜென்ட் படத்தில் அகில் அக்கினி நடித்து வருகிறார். இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து அகில் ஏஜென்ட்டில் கட்டுமஸ்தான உடம்புடன் ராவான ரோலில் நடிக்கிறார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி வருகிறது. ஜூலை மாதம் முதல் இதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

வில்லனாக

வில்லனாக

அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருவதால் பிரபலமான நடிகர் ஒருவரை வில்லனாக போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய படக்குழு கன்னட நடிகர் உபேந்திராவை அணுகி உள்ளனர். ஆனால் தற்பொழுது பல்வேறு படங்களில் உபேந்திரா பிஸியாக நடித்து வருவதால் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

இறுதி கட்ட பேச்சுவார்த்தை

இறுதி கட்ட பேச்சுவார்த்தை

அதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தெலுங்கிலும் மம்முட்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இதில் நடிக்க வைப்பதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் மம்முட்டி யாத்ரா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X