Just In
- 47 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 53 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 1 hr ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாபெரும் 'வெற்றிப் படம்' மான் கராத்தே 'அவுட்'?... 'ஷாக்'கில் சிவ கார்த்திகேயன்!
சென்னை :பெரிதாக எதிர்பார்த்த மான் கராத்தே படம் வசூலில் பின்வாங்கி விட்டதால் சிவகார்த்திகேயன் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
இதை விட சோதனையாக, நாளை பல தியேட்டர்களில் இந்தப் படத்தை எடுத்து விட்டு விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தைப் போடப் போகிறார்களாம்.
இத்தனைக்கும் மிகப் பெரிய வசூலை இது வாரி விட்டதாக சக்ஸஸ் மீட் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்திய படம். ஆனால் வசூலில் தோல்வி என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அடுத்தடுத்து ஹாட் ஹிட்
சிவகாரத்திகேயன் படு வேகமாக திரைத்துறையில் வளர்ந்தவர். அடுத்தடுத்து ஹிட் படங்ளைக் கொடுத்தவர்

தொடர் வெற்றி
அவர் நடிப்பில் வெளியான சமீப கால படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனவை. ு குறிப்பாக எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகியவை நல்ல வெற்றியைப் பெற்றன.

வருத்தப்படாத வாலிபர்
அதிலும் வருத்தப்படாத வாலிபர் படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. அவரது ஸ்டார் ரேஞ்சையும் கூட்டி விட்டது.

ஹன்சிகாவுடன் கராத்தே
இந்த நிலையில்தான் ஹன்சிகாவுடன் அவர் முதல் முறையாக இணைந்தார் மான் கராத்தே படத்துக்காக.

600 தியேட்டர்களில்
பெரிய நடிகர்களின் படங்களைப் போல பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 600 தியேட்டர்களில் இதை திரையிட்டனர்.

5 நாட்களில் பெரிய வசூல என பேச்சு
கடந்த வெள்ளிக்கிழமைதான் படம் ரிலீஸானது. வெளியான 5 நாட்களிலேயே மிகப் பெரிய வசூலைப் பெற்று விட்டதாக படக் குழுவினர் தரப்பிலிருந்து மகிழ்ச்சி செய்தி வந்தது. மேலும் மூன்றே நாட்களில் 12 கோடியை வசூலித்து விட்டதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினார்கள்.

சக்ஸஸ் மீட்டெல்லாம் வைத்து
மேலும் படம் ஹிட்டாகி விட்டதாக சக்ஸஸ் மீட்டெல்லாம் வேறு வைத்தனர்.

ஆனால் வசூல் இல்லையாமே
ஆனால் படம் வசூலில் அடி வாங்கி விட்டதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.

விஷால் படம்
படத்திற்குக் கூட்டமே இல்லை என்றும் இதனால் நாளை பல தியேட்டர்களில் படத்தைத் தூக்கி விட்டு விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தைப் போடப் போகிறார்களாம்.

மான் கொடுத்த அடியை முத்தம் ஆற்றுமா
மான் கராத்தே மூலம் கிடைத்த வசூல் அடியை, லட்சுமி மேன் - விஷால் லிப் லாக் இடம் பெற்றுள்ள நான் சிகப்பு மனிதன் ஆற்றும் என்ற நம்பிக்கையில் தியேட்டர்காரர்கள் உள்ளனராம்.

ஷாக்கில் சிவா
இப்படி படத்தைத் தூக்கப் போகும் செய்தி சிவகார்த்திகேயனை எட்டியுள்ளதாம். அவர் அதிர்ச்சியாகியுள்ளாராம். தயாரிப்பு தரப்பும் கூட ஷாக் ஆகியுள்ளதாம்.

சதியா இருக்குமோ...
தனது படத்திற்கு எதிராக யாரேனும் சதி செய்கிறார்களோ என்று சிவகார்த்திகேயன் தரப்பு சந்தேகப்படுகிறதாம்.