அந்தப் படத்தில் நடிக்க 'மாஸ்டர்' ஹீரோயினுக்கு இத்தனை கோடி சம்பளமா..? வாய்பிளக்கிறது கோலிவுட்!
சென்னை: 'மாஸ்டர்' ஹீரோயின் அடுத்து நடிக்கும் படத்துக்கு வாங்கும் சம்பளத்தைக் கேட்டு கோலிவுட் ஆச்சரியத்தில் உள்ளது.
Recommended Video
ரஜினியின் 'பேட்ட' மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை மாளவிகா மோகனன்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஈரானிய இயக்குனர்
இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானவர். அதில் துல்கர் சல்மான் ஹீரோ. பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடத்திலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

ஷூட்டிங் முடிந்துவிட்டது
இப்போது, விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மற்றும் சாந்தனு, நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி படம் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருந்தது.

லாக்டவுன்
கொரோனா தீவிரம் அடைந்ததால், பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயின், மாளவிகா மோகனன் அடுத்து இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். ஶ்ரீதேவி நடித்த 'மம்' படத்தை இயக்கிய ரவி உடையாவர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக சித்தன்ட் சதுர்வேதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே கல்லி பாய் படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாராவை முந்தினார்
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. இதற்காக மாளவிகா மோகனனிடம் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளும்படி படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் நடிகை நயன்தாராதான் அதிகமாக ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவரை மாளவிகா முந்தியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











