மெர்சல் முதல் வார வசூல்... பாகுபலி சாதனையை முறியடிக்குமா?

By Shankar

ஜனவரி 2017 முதல் அக்டோபர் தீபாவளி வரை 154 படங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனில் பாகுபலி - 2 முதல் இடத்தில் இருந்தது.

முதல் வார மொத்த வசூலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ள மெர்சல், பாகு பலி - 2 மொத்த வசூல் சாதனையை முறியடித்து முன்னேறுமா என்பதை எதிர் வரும் நாட்களின் வசூலை பொறுத்தே தீர்மானிக்க முடியும்

 Is Mersal crossed Baahubali 2 record?

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு ரீலீஸ் செய்யப்பட்ட மெர்சல் திரைப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூலைக் குவித்து வந்தது.

படத்தில் இடம் பெற்ற வசனம், காட்சிகள் பற்றிய எதிர்மறையான கருத்துகள், விமர்சனங்கள், ஊடகங்களில் பிரதான செய்தியானது எல்லாம் படத்துக்கு இலவச விளம்பரமானது.

பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனில் பாகுபலி - 2 வசூலை முறியடிக்கும், முறியடித்து விட்டது என இருவகையான செய்திகள் வெளியாகின்றன.

அதிக திரையரங்குகளில் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆன படம் மெர்சல், போட்டிக்கு வேறு படங்கள் ரீலீஸ் ஆகவில்லை. தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர் விஜய் நடித்த படம் இது.

மெர்சல் முதல் வார முடிவில் 100 கோடி ரூபாய் திரையரங்குகளில் வசூலித்திருக்கிறது இதில் ஜிஎஸ்டி, கேளிக்கைவரி, என்று கழித்தது போக தயாரிப்பாளருக்கு 60 கோடி ரூபாய் பங்குத் தொகை முதல் வார முடிவில் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

விஜய் நடித்த படங்களில் துப்பாக்கி, தெறி படங்கள் 50 கோடி பங்குத் தொகையை கடந்த படங்களாகும். முதல் வாரத்திலேயே 50 கோடியை மெர்சல் கடந்து இருப்பது விஐய் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

இவ்வார இறுதி நாட்களின் வசூல் கடந்த வாரத்தை போன்று உச்சத்தை தொட்டால் பாகுபலி - 2 சாதனையை நெருங்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X