எந்திரன் வசூலை முறியடித்துவிட்டதா மெர்சல்?

By Shankar

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணக்கில் இந்த வருடம் முதல் இடத்தை மெர்சல் படம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் உச்ச வசூல் மெர்சலுக்குத்தான்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் 170 கோடி ரூபாய் வசூலித்தது, தமிழகத்தில். அந்த சாதனையை அடுத்து வந்த எந்த படமும் முறியடிக்க முடியவில்லை.

Is Mersal overtakes Enthiran in Box Office?

எந்திரன் குறுகிய நாட்களில் இந்த வசூலை செய்தது, அப்போது வியாபார வட்டாரங்களில் மிகப் பெரும் சாதனையாக கூறப்பட்டது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் அதே போல் முதல் வாரம் எந்திரன் போன்று பெரும் வசூலைப் பெற்றது. போகிற போக்கை வைத்து கணித்தபோது எந்திரன் வசூலை முறியடித்து முதல் இடத்துக்கு மெர்சல் முன்னேறும் எனக் கூறப்பட்டது.

தமிழகத்தில் மெர்சல் திரையிடப்பட்ட பெரும்பான்மையான தியேட்டர்களில் இன்று முதல் புதிய படங்கள் திரையிடப்படுகின்றன. எனவே பெரும் வசூலை இனி வரும் நாட்களில் மெர்சல் படம் செய்ய வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில் இப்படம் 29 நாட்களில் வசூலித்த மொத்த தொகை என்னவாக இருக்கும் என்பதை சம்பந்தபட்ட தயாரிப்பாளர், மற்றும் விநியோகஸ்தர்கள் வெளிப்படையாக பொது வெளியில் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை. தனிப்பட்ட முறையில் பேசுகிற போது, "முதல் இரண்டு வாரம் மெர்சல் கல்லா கட்டியது. அதன் பின் சராசரி வசூல்தான். 29 நாட்களில் 150 கோடி மொத்த வசூல் என்பதே உண்மை நிலை. எந்திரன் தயாரிப்பாளருக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது. அப்போது கேளிக்கை வரி மட்டும் தான் இருந்தது. மெர்சல் 150 கோடி வசூல் செய்திருந்தாலும் தயாரிப்பாளருக்கான வருவாய் எந்திரன் போன்று நிறைவாக இல்லாமல் போனதற்கு காரணம் கேளிக்கை வரி மற்றும் ஜிஸ்டிதான். தமிழ் நாட்டின் மத்திய விநியோக பகுதியில் 14 கோடி மொத்த வசூல். அதில் தயாரிப்பாளருக்கு 8 கோடி ரூபாய் கிடைக்கும். இதுவே எந்திரன் படத்திற்கு 9.25 கோடி வரை கிடைத்தது. காரணம் அப்போது ஜிஎஸ்டி வரி இல்லை.

மெர்சல் படம் தியேட்டர், விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்த படம். தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்காத படம் என்பதே தற்போதைய நிலைமை. எந்திரன் வசூலை மெர்சல் எட்டிப் புடிக்க முடியவில்லை என்றாலும் விஜய் படங்களின் வசூல் கணக்கில் 150 கோடி என்பது அசுர சாதனைதான். இதனை முறியடிக்க எதிர்வரும் படங்களால் முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X