பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திருமணம்? சிம்பாளிக் சிக்னல் கொடுத்த நடிகை.. வாழ்த்தும் பேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படத்தை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிஹரிகா கொனிடெலா.
இவர், தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பமான, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

நாகபாபு மகள்
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாகபாபு, தமிழில், வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவர் மகள் நிஹரிகா, நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர், நிஹரிகா.

அசோக் செல்வன்
அடுத்து ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நன்னா கூச்சி, மேட் ஹவுஸ் ஆகிய வெப்சீரிஸ்களையும் தயாரித்து நடித்துள்ள நிஹரிகா, இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார்.

சரியான நபரை
ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகை நிஹரிகாவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் வதந்தி பரவின. அதை அவர் மறுத்திருந்தார். பின்னர் நிஹரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவர் தந்தை நாகபாபு தெரிவித்திருந்தார். சரியான நபரை தேடி வருகிறோம்.

திருமணம்
அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை நிஹரிகா. அதில், ஒரு காஃபி கப்பில், மிஸ் என்பதை அடித்துவிட்டு மிசஸ்? என்று எழுதப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் தனது திருமணம் பற்றிதான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ஷ்டசாலி
இதனால் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் எப்போது, எங்கே திருமணம் என்று கேட்டுள்ளனர். சிலர், எங்களை ஏன் அழைக்கவில்லை என்றும் இது ஏதும் படத்துக்கான புரமோஷனா? என்றும் கேட்டிருக்கின்றனர். யார் அந்த அதிர்ஷ்டசாலி என்றும் அந்த நடிகர்தான், கணவரா? என்று சில நெட்டிசனும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











