mr.local teaser- என்னாது மிஸ்டர் லோக்கல் ரஜினியின் ‘அந்த’ வெற்றிப்பட ரீமேக்கா?

மிஸ்டர் லோக்கல் டீசரை வைத்து நிறைய மீம்ஸ்கள் உலா வருகின்றன.

Recommended Video

Mr.Local: ரஜினியின் மன்னன் படம் ரீமேக் தான் மிஸ்டர் லோக்கல்- வீடியோ

சென்னை: சிவகார்த்திக்கேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டீசரை ரஜினி நடித்த மன்னன் 2 படத்தின் இரண்டாவது பாகமா என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகி இருக்கிறார் நயன்தாரா.

வரும் மே 1ம் தேதி ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர், சிவகார்த்திக்கேயன் பிறந்தநாளையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வரும் சிவகார்த்திக்கேயன், இப்படத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்தால், அதே பணக்கார நாயகி, லோக்கல் பையன், மோதல், காதல் என பழைய மாவைத் தான் மீண்டும் இதில் அரைத்திருக்கிறார் ராஜேஷ் என்பது டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது.

இதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் மிஸ்டர் லோக்கல் டீசரை வைத்து மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அப்படி நம் கண்ணில் பட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

மன்னன் ரீமேக்கா?

மன்னன் ரீமேக்கா?

என்னடா இது ரஜினி நடித்த மன்னன் பட ரீமேக்கா என இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் டீசரைப் பார்க்கும் பலருக்கும் இந்த கேள்வி எழாமல் இல்லை.

சூர்யா டீசர்:

சூர்யா டீசர்:

இது என் ஜி கே டீசருடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ். அதில் சூர்யா கூறுவதைப் போலவே இதில் சிவகார்த்திக்கேயனின் அறிமுகக் காட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஹேப்பி:

ரசிகர்கள் ஹேப்பி:

ஆனாலும் எது எப்படியோ, சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளன்று அவரது பட டீசர் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை செம ஹேப்பி ஆக்கி இருக்கிறது. டீசரைப் பார்த்தே படம் பழைய கதை தான் என்று சிலர் விமர்சித்தாலும், நிச்சயம் மிஸ்டர் லோக்கல் சூப்பர்ஹிட்டாகும் என மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் சிவா பேன்ஸ்.

டெம்ப்ளேட் ரெடி:

டெம்ப்ளேட் ரெடி:

அதோடு சமீபகாலமாக புதிய படங்களில் இருந்து மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை உருவாக்கி வருபவர்களுக்கு, மிஸ்டர் லோக்கல் டீசரும் விருந்து வைத்திருக்கிறது. அதில் இருக்கும் பல காட்சிகளை மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளாக மாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு சாம்பிள் தான் இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X