twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானே வருவேன் ஃப்ளாப்பா? பொன்னியின் செல்வனை முகலாயர்களாக காட்டவில்லை... தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி

    |

    சென்னை: கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களை தயாரித்துள்ள தனஞ்செயன் நேற்று ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

    அதில் பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படங்களின் வசூல் பற்றி பேசியிருக்கிறார்.

    அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தை மற்ற படங்களுடன் ஒப்பிடலாமா என்பதை பற்றியும் விவரித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன்ல ஐஸ்வர்யா ராயின் மகள் இப்படியொரு வேலை பண்ணியிருக்காங்களா? அம்மா பூரிப்பு! பொன்னியின் செல்வன்ல ஐஸ்வர்யா ராயின் மகள் இப்படியொரு வேலை பண்ணியிருக்காங்களா? அம்மா பூரிப்பு!

    விக்ரம்

    விக்ரம்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் படைத்த திரைப்படம் விக்ரம்தான். அந்தப் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்குமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதன் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால், வழக்கமாக ஓய்வு பெற்ற வயதானவர்கள் திரைப்படங்கள் பார்க்க திரையரங்கிற்கு வர மாட்டார்கள். தமிழ்நாட்டில் 30 சதவீதம் மக்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான். அப்படிப்பட்ட வயதானவர்கள் தான் பொன்னியின் செல்வன் நாவலை அதிகமாக படித்திருப்பார்கள். இப்போது படம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்த்துவிட்டு அந்த மக்களும் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்கிறார்கள்.

    மணிரத்னம் காரணம்

    மணிரத்னம் காரணம்

    அனைத்து இடத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதற்கு காரணம் புதிதாக வரும் அந்த 30 சதவிகித மக்கள் தான். அவர்களை திரையரங்கிற்கு வர வைத்த பெருமை பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குநர் மணிரத்தினம் அவர்களைத்தான் சேரும். குறிப்பாக தான் விடியற்காலை நான்கரை மணி காட்சியை பார்க்க போவதாக சொன்னபோது, பொன்னியின் செல்வன் நாவலின் விசிறியான எனது மனைவியும் கண்டிப்பாக அப்போது படம் பார்க்க வருவேன் என்று கூறினார். விடியற்காலையில் குடும்பங்கள் அதிகமாக வர மாட்டார்கள் என்றுதான் திரையரங்கிற்கு போனேன். ஆனால் நான்கரை மணி காட்சிகளுக்கு கூட நிறைய குடும்பங்கள் வந்திருந்தனர் என்று என்று தனஞ்செயன் பாராட்டியிருக்கிறார்.

    பாகுபலி ஒப்பீடு

    பாகுபலி ஒப்பீடு

    பாகுபலியுடன் ஒப்பிட்டு பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்விக்கு, பாகுபலி, கே.ஜி.எஃப் ஆகியவை கற்பனை திரைப்படங்கள். அதனை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்தியா முழுக்க ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் வரலாறு சம்பந்தப்பட்ட படங்களை நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் காண்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஹிந்தியில் உருவான பத்மாவத் திரைப்படம் தமிழில் வெற்றி பெறவில்லை. அதேபோல பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கும் பொழுது சோழர்கள் பற்றி தான் கதை இருக்க வேண்டும். ஹிந்தியில் டப் செய்யும்போது முகலாய அரசர்கள் என்று காட்ட மாட்டேன் என்று மணிரத்தினம் உறுதியாக இருந்தார். சோழர்கள் என்று காட்டும் போது இந்தி ரசிகர்களை அது சென்றடையாது என்று தெரிந்தும் மணிரத்தினம் தெளிவாக இது தமிழர்களைப் பற்றிய படம் என்றுதான் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்என்று தனஞ்செயன் கூறி இருக்கிறார்.

    நானே வருவேன்

    நானே வருவேன்

    பொன்னியின் செல்வன் மட்டுமல்ல நானே வருவேன் திரைப்படமும் வெற்றி படம்தான். படம் வெளியாவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் தானு லாபம் பார்த்து விட்டார். குறுகிய பட்ஜெட்டில் எடுத்த காரணத்தினால் அந்தப் படம் எவ்வளவு சம்பாதிக்க வேண்டுமோ அதை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. திரையரங்கில் காட்சிகள் குறைந்திருக்குமே தவிர எந்த திரையரங்கத்திலும் அந்தப் படத்தை தூக்கவில்லை. நானே, தயாரிப்பாளர் தானுவிடம் ஒரு ஷேர் கேட்கலாம் என்ற அளவிற்கு அந்த படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று தனஞ்செயன் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Dhananjeyan, who has produced films like Kalakalappu, theeya velai seiyanum Kumaru, gave an interview yesterday. In it, he talked about the collection of Ponni'yins Selvan and Nane Varavan films. Apart from that, he has also described whether Ponniyin's Selvan can be compared to other films or not.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X