எல்லாமே பொய்யா? போலீஸ் கிட்ட அடிவாங்க வச்சாங்க அம்மான்னு நாடியா சங் சொன்னதை விளாசும் நபர்!

சென்னை: உலகத்திலேயே பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து வந்தவர்கள் போல பேசுவதை எல்லாம் கடந்த இரண்டு வாரங்களாக கேட்டு ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர்.

பிரபலங்களின் வாரிசுகளும், கார், வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களும் பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல பேசுவது ரசிகர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை.

மலேசியாவில் இருந்து போட்டியாளராக கலந்து கொண்ட நாடியா சங் உருக்கமாக பேசியது சில ரசிகர்களை ஷாக்காக்கிய நிலையில், அதுவும் முழுக்க பொய் என நெட்டிசன் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலேசிய போட்டியாளர்

மலேசிய போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி தமிழ் ரியாலிட்டி ஷோ என்றாலே சில மலேசிய போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மலேசிய தமிழ் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் போட்டியாளர்களை அவ்வாறு களமிறக்கி வருகின்றனர். ஏற்கனவே முகேன் ராவ் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் நாடிய சங் கலந்து கொண்டுள்ளார்.

ஒரு கதை சொல்லட்டுமா

ஒரு கதை சொல்லட்டுமா

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை அப்செட் ஆக்கும் வகையில் நிகழ்ச்சி தொடங்கி இருவாரங்களாக நடைபெற்ற ஒரு கதை சொல்லட்டுமா சார் டாஸ்க் எந்தளவுக்கு வச்சி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வச்சி செய்து விட்டது.

அம்மா அடிச்சாங்க

அம்மா அடிச்சாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் மோசம் என ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என ஸ்க்ரிப்ட் கொடுக்கப்படுகிறதா? அல்லது அப்படி இருக்கும் போட்டியாளர்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறார்களா? என தெரியவில்லை. போன சீசனில் பாலாஜி முருகதாஸ் அம்மா அப்பா பற்றி பேசிய நிலையில், இந்த சீசனில் அம்மாவின் கொடுமைகளை அடுக்கி இருந்தார் நாடியா சங்.

போலீஸ் கிட்ட அடிவாங்க வச்சாங்க

போலீஸ் கிட்ட அடிவாங்க வச்சாங்க

சிறு வயதில் வேலைக்கு போனதாகவும் மலேசிய போலீஸ் கிட்ட அம்மா தன்னை அடிவாங்க வச்சாங்க என்றும் நாடியா சங் சொல்ல சொல்ல போட்டியாளர்கள் அனைவருக்கும் கண்கள் குளமாகின. ஆனால், 13 முதல் 15 வயதான ஒரு பெண் குழந்தை மலேசிய போலீசார் எப்படி அடிப்பார்கள்? குழந்தை தொழிலாளியாக மலேசியாவில் எப்படி அவர் வேலை செய்தார் என்றும் மலேசிய நெட்டிசன் ஒருவர் எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அம்மாவுடன் செல்ஃபி

அம்மாவுடன் செல்ஃபி

மேலும், நாடியா சங் தனது அம்மா பிறந்தநாளுக்கு அம்மாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அம்மா கூட போட்டோ தானப்பா எடுத்தா என்ன தப்பு என்று சில ரசிகர்கள் கேட்டாலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக அம்மா போல தானும் ஆக வேண்டும் என்றும், அம்மா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி நாடியா வெளியேற்றத்தில் இருந்து தப்பிக்கவே இப்படி பொய் கதை கூறுகிறார் என விளாசி வருகின்றனர்.

உண்மையை சொல்லணும்

உண்மையை சொல்லணும்

கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் உங்களுக்கு நடந்த உண்மையை கதையை மட்டும் சொல்லணும் என கடந்த வாரமே கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்ததையும் ரசிகர்கள் நோட் பண்ணி பிக் பாஸ் வீட்டில் பொய் சொன்னால் யாருக்கு தெரிய போகிறது என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். நாடிய சங்கை வெளியேற்ற மற்ற போட்டியாளர்களின் பி.ஆர். டீம் பண்ணும் வேலை என்றும் சில ரசிகர்கள் நாடியாவுக்கு ஆதரவாக கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர். நாடியாவின் அம்மா மீடியாவுக்கு பேட்டி கொடுத்தால் மட்டுமே உண்மை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X