For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அதிர்ச்சி.. பிக் பாஸ் வீட்டில் அடிதடி சண்டை.. ரத்தக் காயங்களுடன் வெளியேறினாரா நமீதா மாரிமுத்து?

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரத்தக் காயங்களுடன் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்குள் சண்டையை மூட்டி வாக்குவாதம் நடைபெற வைத்து டிஆர்பியை ஏற்றுவதே அந்த நிகழ்ச்சியின் மையக்கரு என ஏகப்பட்ட நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

  பிக் பாஸ் வீட்டின் 8வது நாள்… எப்படி இருந்துச்சு ... ஒரு குட்டி ரவுண்டப் !பிக் பாஸ் வீட்டின் 8வது நாள்… எப்படி இருந்துச்சு ... ஒரு குட்டி ரவுண்டப் !

  இந்நிலையில், நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே அடிதடி சண்டையே நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

  ஓவர் நைட்டில் பிரபலம்

  ஓவர் நைட்டில் பிரபலம்

  இந்த முறை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்துவை போட்டியாளராக விஜய் டிவி களமிறக்கி, கதை சொல்லும் டாஸ்க்கில் தொடர்ந்து 20 நிமிடங்கள் அவர் பேச்சை ஒளிபரப்பி ஓவர் நைட்டில் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

  நமீதாவின் கதை

  நமீதாவின் கதை

  மற்ற போட்டியாளர்களை விட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் கதை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. ஒவ்வொரு திருநங்கைகளின் வாழ்விலும் ஏற்படும் துயரங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைய நமீதா மாரிமுத்துவின் கண்ணீர் கதை முக்கியமானதாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.

  திடீர் வெளியேற்றம்

  திடீர் வெளியேற்றம்

  இந்த சீசனின் டைட்டில் வின்னரே நமீதா தான் அவருடைய கதையை கேட்டதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்வீட் போட ஆரம்பித்து சந்தோஷம் அடைந்த நிலையில், அந்த சந்தோஷம் அடங்குவதற்குள் அதிரடியாக நமீதா மாரிமுத்து அவராகவே வீட்டை விட்டு ‘சில தவிர்க்க முடியாத காரணத்தால்' வெளியேறினார் என்று பிக் பாஸ் வாய்ஸ் மட்டுமே ஒலிக்கப்பட்டு அவர் எப்படி வெளியேறினார் என்பதையே காட்டவில்லை.

  நமீதாவுக்கு கொரோனா

  நமீதாவுக்கு கொரோனா

  மேலும், நமீதா மாரிமுத்துவுக்கு கொரோனா உறுதியானதாகவும் அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் திடீரென வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தகவல்கள் பரவ ஆரம்பித்தன. நமீதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை போட்டியாளர்களையும் தனிமைப்படுத்தி இந்நேரம் நிகழ்ச்சியையே நிறுத்திருக்க வேண்டுமே அதை ஏன் செய்யவில்லை என்கிற கேள்விகள் கிளம்பின. அதனால், நிச்சயம் நமீதாவுக்கு கொரோனா ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது.

  அடிதடி சண்டை

  அடிதடி சண்டை

  நாடக கலைஞரான தாமரை செல்விக்கும் நமீதா மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் நமீதா மாரிமுத்து வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து காயங்களுடன் வெளியேறினார் என்று தற்போது வெளியாகி இருக்கும் தகவல் தான்.

  பிக் பாஸ் ஒப்பந்தம்

  பிக் பாஸ் ஒப்பந்தம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல கண்டிஷன்களை போட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் தான் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் அப்படி போடப்பட்ட பிக் பாஸ் ஒப்பந்தம் காரணமாகத்தான் நமீதா மாரிமுத்து தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  நமீதாவுக்கு சிகிச்சை

  நமீதாவுக்கு சிகிச்சை

  தனியார் மருத்துவக் கல்லூரியில் காயங்களுடன் நமீதா மாரிமுத்து அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிக் பாஸ் குழு சார்பாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நமீதாவுடன் சுமூக பேச்சுவார்த்தையை பிக் பாஸ் குழு நடத்தியதன் பேரிலேயே அவர் தரப்பு இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. நமீதா மாரிமுத்துவே தனக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக சொல்வாரா? இல்லை விஜய் டிவியின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil 5 contestant Namitha Marimuthu exit from the house with some injuries after a physical fight with Thamarai Selvi buzz circulates in closed circle.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X