சத்தமே இல்லாமல் திருமணத்தையும் முடித்து விட்டாரா நயன்தாரா? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக விஜய் டிவி பேட்டியில் அறிவித்த நயன்தாரா அதே போல தனது திருமணத்தையும் முடித்துக் கொண்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் திரைப்படங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்.
நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே மலர்ந்த காதல் 6 வருடங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

லேடி சூப்பர்ஸ்டார்
கேரளாவில் டிவி ஆங்கராக இருந்த டயானா மரியம் குரியன் 2003ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படத்தின் மூலம் நயன்தாராவாக சினிமாவில் அறிமுகமானார். 2005ம் ஆண்டு தமிழில் வெளியான அய்யா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான சந்திரமுகி, கஜினி, சிவகாசி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் நடித்த நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக தனது விடா முயற்சியால் முன்னேறியுள்ளார்.

பிரபலங்களுடன் காதல்
நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ரொம்பவே டீப்பாக காதலித்து வந்தனர். வல்லவன் படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் என படு தாராளமாக நடித்துக் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்புவை விட்டு விலகினார். அதன் பின்னர், வில்லு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார். ஆனால், பிரபுதேவாவின் மனைவி பிரச்சனையை கிளப்ப பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் பிரிந்தனர்.

விக்னேஷ் சிவன் உடன் காதல்
சிம்புவின் போடா போடி படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், காத்துவாக்குல அப்படியே ஆறாண்டுகள் ஓடிவிட்டன.

நிச்சயம் ஆகிடுச்சு
இருவரும் எப்போது தான் திருமணம் செய்யப்போகின்றனர் என ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் டிடி நீலகண்டனுக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார். அதற்கு முன்பாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் விரலில் உள்ள மோதிரத்தை மட்டும் போட்டோ போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார்.

திருமணம் ஆகிவிட்டதா?
நிச்சயம் முடிந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்கிற கேள்வி மீண்டும் எழுந்தது. இந்த ஆண்டு முடிவுக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் போயஸ் கார்டனில் ரெடியாகி வரும் வீட்டின் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் என பல்வேறு பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

காரணம் இதுதான்
காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா, சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

அறிவிப்பாரா
ஆனால், இதுவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை நிச்சயம் நடந்ததை ரகசியமாக வைத்து பேட்டியின் போது சொன்னது போல, காத்துவாக்குல ரெண்டு காதல் புரமோஷன் போது இதுதொடர்பான கேள்வி கேட்கப்பட்டால், நயன்தாரா விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











