மனைவியுடன் ஜாலி டூர் அடித்து வருகிறாரா நெல்சன்? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போஸ்ட் போடுறாங்களே!
சென்னை: பீஸ்ட் படம் சொதப்பி விட்ட நிலையில், அடுத்ததாக தலைவர் 169 பக்கம் திரும்புவார் நெல்சன் என எதிர்பார்த்தால் தனது மனைவியுடன் ஜாலி டூர் அடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்காடுக்கு சென்றுள்ள நெல்சனின் மனைவி வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது குடையுடன் இயற்கை அழகை ரசிப்பது போல இயக்குநர் நெல்சன் வெளியிட்டுள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒன்றாக ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளீர்களா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

டார்க் காமெடி
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நெல்சன். குறைவான பட்ஜெட்டில் டார்க் காமெடி ஜானரில் ஒரு புதிய படத்தை இயக்கி அசத்தினார். அந்த படத்தின் வெற்றி, அடுத்து அதே போல இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் ஓட வைத்தது.

பீஸ்ட் மாட்டிக்கிச்சு
டாக்டர் படத்தில் வைத்ததை போலவே பாடல்களை கூட இடம் மாற்றாமல் அதே போல விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வைத்தால் படம் ஹிட் ஆகிவிடும் என நினைத்து விட்டார் போல நெல்சன். ஆனால், திரைக்கதை வலுவில்லாமல் யோகி பாபு நடித்த கூர்கா படத்தின் காப்பியாகவே படம் இருந்ததாக எழுந்த கடுமையான விமர்சனங்களால் பெரும் பின்னடவை சந்தித்தது.

விஜய் பேட்டி
பீஸ்ட் படத்திற்கு செய்த செலவுகளே போதும். மேலும், இசை வெளியீட்டு விழா நடத்தி தேவையில்லாத செலவு செய்ய வேண்டாம் என சன் பிக்சர்ஸ் நினைத்து விட்டதோ என்னவோ ஒரே ஒரு பேட்டியுடன் புரமோஷனை முடித்துக் கொண்டனர். நடிகர் விஜய்யை இயக்குநர் நெல்சனே எடுத்த பேட்டியை பார்த்த பலருமே அப்படியே செட்டப் பேட்டி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறதே என விமர்சித்து இருந்தனர்.

என்ஜாய் பண்ணும் நெல்சன்
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில், அது தொடர்பான லோகேஷன் வேட்டையில் இறங்கி உள்ளாரா நெல்சன் என எதிர்பார்த்தால் ஜாலியாக சுற்றுலா செய்து வருகிறார் நெல்சன் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தற்போது மலை பிரதேசத்தில் குடையுடன் அவர் கொடுத்துள்ள கூலான போஸ் ரஜினி ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளது.
மனைவியுடன் சுற்றுலாவா
சமீபத்தில் ஏற்காடு ரெசார்ட்டில் நெல்சனின் மனைவி மோனிஷா வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், இயக்குநர் நெல்சன் தனியாக ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நிலையில், இருவரும் ஒன்றாகத் தான் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்களா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

ரூம் போட்டு யோசிக்கிறாரோ
பீஸ்ட் படத்துக்குத்தான் ஒரு நல்ல கதை சிக்கவில்லை. கிடைத்ததை வைத்து ஏதோ பண்ணிட்டீங்க.. ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்துக்கு ஒரு நல்ல கதையை இப்படித்தான் ரூம் போட்டு யோசிக்கிறாரு போல என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் போடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கத்தரி முடிஞ்சு
அடிக்கிற வெயிலில் எதுக்கு தலைவர் 169 பட ஷூட்டிங்கை ஆரம்பிக்க என நினைத்து கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார் போல நெல்சன் என்றும் கலாய்த்து வருகின்றனர். மேலும், ஜூன் மாதத்திற்கு மேல் ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு பணிகளை நெல்சன் ஆரம்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக தனுஷ் உடன் ஒரு படத்தையும் நெல்சன் பண்ணுகிறாராம்.


Click it and Unblock the Notifications











