அவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி? நெற்றிக்கண் சீக்ரெட்!

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் கொரிய படத்தின் காப்பி எனக் கூறப்படுகிறது.

Recommended Video

Nayanthara movie with Vignesh Shivan

சென்னை: விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் ஒரு கொரிய படத்தின் காப்பி என தகவல் வெளியாகியுள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். 'அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

அந்த போஸ்டரை பார்க்கும் போது, அதன் எழுத்துக்கள் பிரெய்லி முறையில் இருந்தது தெரிந்தது. எனவே நயன்தாரா இதில் கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவர் நானும் ரவுடி தான் படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்திருந்தார். எனவே நிச்சயமும் இப்படமும் அவருக்கு நல்ல பெயரையும், வெற்றியையும் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கலாம்.

கொரியன் பட காப்பி

கொரியன் பட காப்பி

இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் ஒரு கொரிய படத்தின் காப்பி என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் வெளியான கொரியன் படம் பிளைண்ட். இது தான் நெற்றிக்கண் திரைப்படமாக தமிழில் எடுக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

சாட்சிகள்

சாட்சிகள்

பிளைண்ட் படத்தின் கதைப்படி, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். போலீஸ் அந்த வழக்குகளுக்கு சாட்சியை தேடுகிறது. ஒரு மாணவியும், இன்னொருவரும் சாட்சி சொல்ல வருகிறார்கள். இரண்டும் வெவ்வேறு விதமாக இருக்கிறது.

திசை திரும்பும் வழக்கு

திசை திரும்பும் வழக்கு

இதனால் வழக்கின் விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வருகிறது என்பதே கதை. இதில் கண் தெரியாத காவல்துறை அதிகாரியாக நயன்தாரா நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

கட்டாயம்

கட்டாயம்

கொரியன் படத்தை அதிகாரப்பூர்வமாக காப்பி ரைட்ஸ் வாங்கி எடுக்கிறார்களா இல்லை காப்பியா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. படக்குழு இதுபற்றி வாய் திறந்தால் தான் உண்மை வெளிவரும். ஏற்கனவே தொடர் தோல்விகளால் கட்டாயம் ஒரு வெற்றிப்படம் தர வேண்டிய கட்டாயத்தில் நயன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X