இயக்குனர் ராமுடன் இணைகிறாரா பிரபல மலையாள நடிகர்!?.. ஆர்வம் காட்டும் ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு சகாப்தம் இயக்குனர் பாலு மகேந்திரா. பல தரமான படைப்புகளை இயக்கியுள்ளார்.

பாலூ மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த சிறப்பான மாணவர்களில் ஒருவர் இயக்குனர் ராம்.

இயக்குனர் ராம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி உடன் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

மலையாளம் சினிமாவில் பிரபல நடிகரான நிவின் பாலி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் நேரம், ரிச்சி போன்ற சில படங்கள் நடித்து இருந்தாலும் நிவின் பாலிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பெண் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ராஜீவ் ரவி இயக்கத்தில் Thuramukham படத்தில் நடித்து வருகிறார்.

தரமான படைப்புகள்

தரமான படைப்புகள்

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராம்.
தங்க மீன்கள், கற்றது தமிழ், தரமணி மற்றும் பேரன்பு போன்ற அருமையான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். ராமின் படங்கள் வசூல் ரீதியாக பேச படவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

அது தான் இதுவா!?

அது தான் இதுவா!?

ராமின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் சிம்புவுடன் இணைகிறார் என்று சொல்லப்பட்டது. சிம்பு மாநாடு படத்தில் நடித்து வரும் நிலையில் தொடர்ந்து படங்கள் வரிசையில் உள்ளதாக தெரிகிறது. சிம்புவுடன் இணைய வேண்டிய படம் தான் நிவின் பாலிக்கு கை மாறுகிறதோ என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழும்பியுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

ராம் ஏற்கனவே பிரபல மலையாள நடிகரான மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி இருந்தார். பேரன்பு தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. அது போலவே ராம் - நிவின் பாலி இணையும் படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் இந்த தகவலின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X