நம்பர் நடிகைக்கும் காதலருக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியலையே.. திடீர்னு இப்படி சிங்கிள் ஆகிட்டாரு?

சென்னை: சமீபத்தில் கிளம்பிய சர்ச்சைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் நம்பர் நடிகைக்கும் காதலருக்கும் பிரச்சனை என வதந்திகள் கிளம்பி உள்ளன.

ஏற்கனவே ஏகப்பட்ட பிரேக்கப்கள் ஆகிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த இயக்குநருடன் கெட்டியான காதலில் ஈடுபட்டிருந்தார் நம்பர் நடிகை.

லாக்டவுன் நேரத்திலும் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், இப்போ அந்த இயக்குநர் மட்டும் தனியாக உள்ளாராம்.

திருமணத்துக்கு நோ

திருமணத்துக்கு நோ

பல ஆண்டுகளாக அந்த இயக்குநரை காதலித்து அவருடன் டேட்டிங் செய்து வரும் அந்த பிரபல நடிகை திருமணத்துக்கு மட்டும் இதுவரை பச்சைக் கொடி காட்டாமல் பிக் நோ சொல்லி வருகிறாராம். அடிக்கடி இருவருக்கும் இடையே திருமணம் ஆகப் போவதாக தகவல்கள் பரவினாலும், அவை வதந்தியாகவே முடிகின்றன.

லிவ்வின் வாழ்க்கை

லிவ்வின் வாழ்க்கை

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அவருடன் ஒன்றாக இணைந்தே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் தான் அடிக்கடி அந்த இயக்குநர் தனது சமூக வலைதள பக்கத்தில் நம்பர் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிடுகிறார் என்கிற பேச்சுக்களும் வலம் வந்தன.

பிரச்சனை வெடித்ததா

பிரச்சனை வெடித்ததா

இந்நிலையில், இருவருக்கும் இடையே தற்போது பிரச்சனை வெடித்தது என்றும் நம்பர் நடிகை அந்த இயக்குநருடன் ஒன்றாக இல்லை என்றும் சமூக வலைதளங்களில் தீயாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த திடீர் பிரச்சனைக்கு காரணம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய ஒரு போட்டோ தான் என்றும் கூறுகின்றனர்.

போட்டோ சர்ச்சை

போட்டோ சர்ச்சை

எப்போதுமே இருவரும் இணைந்தே போட்டோக்களை வெளியிட்டு வந்த நிலையில், அந்த போட்டோ சர்ச்சைக்கு பிறகு இயக்குநர் சிங்கிளாக இருக்கும் சில போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரவும் பிரேக்கப் வதந்திக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

ஹேப்பியாதான்

ஹேப்பியாதான்

அதே சமயம் அந்த புகைப்படத்தில் இயக்குநர் செம ஹேப்பியாக ஜாலியாகத் தான் இருக்காரு, பிரேக்கப் ஆகி இருந்தால் நிச்சயம் சோகத்தில் ஆழ்ந்திருப்பார். அதனால், தேவையில்லாமல் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் நம்பர் நடிகையின் ரசிகர்கள் பதில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X