ஓவியா அரசியலுக்கு வருகிறாரா?: அப்ப ஏன் இப்படி சொன்னார்?
Recommended Video

கோவை: ஓவியா அளித்த பேட்டியால் அவர் அரசியலுக்கு வருகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் ஓவியா. மனதில் பட்டதை பளிச்சென்று பேசுகிறார். அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
இந்நிலையில் கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சமுதாயம்
நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். சமுதாயத்திற்கு நல்லது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை தான் கண்டுகொண்டதே இல்லை.

சேவை
அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வதாகும். அது ஒன்றும் காமெடி இல்லை. சேவை செய்ய அரசியல் மிகவும் உதவிகரமானது. ஆனால் பலர் அதை பெயர், புகழ், பணத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார்கள்.

ஆதரவு
கமல் ஹாஸன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். மனிதாபிமானமுள்ள அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவருக்கு ஏற்கனவே பெயர், புகழ், பணம் இருப்பதால் அவர் நிச்சயம் மக்களுக்கு சேவை செய்வார் என்றார் ஓவியா.

ரசிகர்கள்
சமுதாயத்திற்கு நல்லது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று ஓவியா கூறியுள்ளது அவரும் ஒரு வேளை அரசியலுக்கு வரப் போகிறாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications