Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓவராக அமீருக்கு இடம் கொடுக்கும் பாவனி.. ஷிவானி அம்மா போல பாவனி அம்மாவும் பந்தாடுவாரா?
சென்னை: பாவனியை அமீர் ஃப்ளர்ட் பண்ணுவதையே பாவனியின் ஆர்மியினர் பார்க்க முடியாமல் தவித்து வரும் நிலையில், பாவனியின் அம்மாவையும் சேர்த்து மடக்கி விடுவேன் என அமீர் பேசுவதை கேட்டும் பொங்காமல் சிரித்து மேலும், இடம் கொடுக்கிறார் பாவனி என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அபிநய்க்கு முன்னதாக இதே போல இடம் கொடுத்தது தான் பாவனியை இந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
ரூ
3
கோடிக்கு
கார்,
2.7
கோடிக்கு
டைமண்ட்
நெக்லஸ்
...
கத்ரினா
ஜோடிக்கு
குவிந்த
காஸ்ட்லி
பரிசுகள்!
இந்நிலையில், அமீருக்கும் ஏன் ஓவராக இடம் கொடுக்கிறார் பாவனி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

எல்லை மீறும் அமீர்
அபிநய் பற்றி பாவனியிடம் பேசி பேசியே கமல் சார் பெரிய குறும்படம் போட்டு பாவனியை அசிங்கப்படுத்தும் அளவுக்கு கொண்டு வந்த அமீர் இப்படி காதல் லீலைகளை தொடர்ந்து செய்து வருவது பிக் பாஸ் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த சீசனில் காதல் டிராக் அமையவில்லை என்பதால் இப்படி கன்றாவி டிராக்கை எல்லாம் டிரை பண்ணுவீங்களா என திட்டி தீர்த்து வருகின்றனர்.

பாவனியின் ஹைட்
அந்த அளவுக்கு அபிநயை அசிங்கப்படுத்திய பாவனியின் ஹைட் பற்றி அமீர் கேட்க கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பாவனியின் ஹைட் 5.4 என அபிநய் அருகே இருந்து கொண்டு சொல்வதை எல்லாம் பார்க்கும் ரசிகர்களின் நிலைமை தான் இந்த சீசனில் பாவமாக இருக்கிறது. அந்த பக்கம் அக்ஷரா மற்றும் வருணிடம் சென்று பாவனி முட்டை வாங்கியது தாமரைக்கு சந்தோஷம் அமீர் 17 காயின்களை பொறுக்கி தோற்றது எனக்கு சந்தோஷம் என கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் டபுள் கேம் ஆடுகிறார்.

என்ன பண்றீங்க பிரியங்கா
பாவனிக்கு அபிநய் மூலமாக அப்படியொரு பிரச்சனை வந்தது தெரிந்தும் அதே போன்று இன்னொரு பிரச்சனை அமீர் மூலமாக வந்து விடக் கூடாது என தடுக்காமல் அமீர் உடன் இணைந்து கொண்டு என்ன பண்ண ட்ரை பண்றீங்க பிரியங்கா, நீங்க பண்றதுக்கு பேரு என்ன தெரியுமா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பாவனி அம்மாவையும்
ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாவனி அம்மா உள்ளே வந்து அமீர் காதை திருகி கேட்டால் உடனடியாக அவங்க காலில் விழுந்து பெண் கேட்டு விடு என பிரியங்கா சொல்ல பாவனியை விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்ட்டி என ஆன்ட்டி ஹீரோவாகவே மாறிவிட்டார் அமீர். அதையும் பிரியங்கா மற்றும் பாவனி சிரித்து ரசிப்பதை பார்த்தால் தான் பாவனி மீது பயங்கர கடுப்பாக வருகிறது.

இடம் கொடுக்கும் பாவனி
என் அம்மாவை எல்லாம் தேவையில்லமல் இழுத்து பேசாதே அமீர் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் என அதட்டாமல் சிரித்துக் கொண்டே பாவனி அமீருக்கு ஓவராக இடம் கொடுப்பது மீண்டும் பாவனிக்கு ஒரு பெரிய சிக்கலை விரைவில் கொடுக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஷிவானி அம்மா போல
பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியா அப்பா வந்து கவின் - லாஸ்லியா காதல் டிராமாவுக்காக கொதித்து எழுந்து பேசினார். கடந்த சீசனில் ஷிவானியின் அம்மா பாலாவுக்கு ஆயா வேலையா செய்யுற என கேள்வி கேட்டு விட்டு தொடர்ந்து பாலா உடனே நல்ல நட்புடன் இருந்து வருகிறார். அதே போல இந்த சீசனில் பாவனி அம்மா ஃப்ரீஸ் டாஸ்க்கில் உள்ளே நுழைந்து பாவனிக்கு அட்வைஸ் சொல்லும் காட்சிகள் அரங்கேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அபிநய் மனைவி என்ன சொல்ல போறாங்க என்பதற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.