விஷாலின் 32வது படத்தில் நடிக்கவுள்ளீர்களா - பிரியா பவானி சங்கர் பதில் ட்வீட்
சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படமும் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

மிகவும் எதிர்பார்ப்பில்
தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்
இதைத்தொடர்ந்து விஷாலின் 32வது படத்தை அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார் என சில தகவல்கள் வெளிவந்தன. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தை Five Star Films நிறுவனம் தயாரிக்கும் என தெரிகிறது.
Recommended Video

தொடர்ந்து படங்கள்
இந்நிலையில் விஷாலின் 32வது படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே என பிரியா பவானி சங்கர் கோலிவுட்டில் பிஸியான நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உறுதியான தகவல்
ட்விட்டரில் விஷாலின் 32வது படத்தில் நடிக்கவுள்ளீர்களா என ஒரு ரசிகரின் கேள்விக்கு "நடிகர் விஷாலும், இயக்குனர் கார்த்திக்கும் & தானும் தங்களையும் தங்களின் அன்பிற்குரியோர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளோம். நிலைமை சரியானதும் அறிவிப்புகளை வெளியிடுவோம்" என பதில் கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.


Click it and Unblock the Notifications











