ப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதா?: இந்த போட்டோவை பாருங்களேன்...
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா என்று தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சல்மான் கானின் பாரத் படம் மூலம் மீண்டும் பாலிவுட்டுக்கு வருகிறார். 35 வயதாகும் ப்ரியங்காவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணம்
ப்ரியங்கா சோப்ரா தான் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் தன் கையில் தாலியை கட்டி வைத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசத் துவங்கிவிட்டனர்.

பாலிவுட்
ப்ரியங்காவுக்கு ரகசியமாக திருமணம் நடந்ததால் தாலியை கையில் கட்டி வைத்துள்ளாரா இல்லை சும்மா ஃபேஷனுக்காக கட்டினாரா என்பது தெரியவில்லை. திருமணம் குறித்து ப்ரியங்கா வாய் திறக்கவில்லை.

குழந்தைகள்
எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். நல்ல மாப்பிள்ளை கிடைத்தவுடன் திருமணம் செய்வேன். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக ப்ரியங்கா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பிரபலங்கள்
பாலிவுட் பிரபலங்கள் வெளிநாட்டில் ரகசியமாக திருமணத்தை முடித்துவிட்டு தங்களுக்கு தோனும்போது அதை உலகிற்கு அறிவித்து வரும் நிலையில் ப்ரியங்கா சோப்ரா பற்றி இப்படி ஒரு பேச்சு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











