என்னது அந்த சீரியலோட காப்பியா சீதாராமன்.. ஆமாம்ல அப்படித்தான் இருக்கு!

சென்னை : ரோஜா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா நல்காரி அடுத்ததாக சீதாராமன் தொடரில் நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் லீட் கேரக்டரில் ராமாக ஜே டிசோசாவும் அவரது தாயாக ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர்.

இந்தத் தொடரில் திருமணத்தின்போது, தன்னுடைய காதலனுடன் மதுமிதா ஓடிப்போக, எப்போதும்போல தங்கையை ஹீரோவிற்கு மணமுடிக்கின்றனர்.

சீதாராமன் தொடர்

சீதாராமன் தொடர்

பிரபல சேனலில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது சீதாராமன் தொடர். இந்தத் தொடரில் ரோஜா என்ற தொடரின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஜே டிசோசா நாயகனாகவும் அவரது அம்மாவாக ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரிலும் வில்லத்தனம் செய்யும் அம்மா, அது தெரியாமல் குழந்தைத்தனம் காட்டும் ஹீரோ என வழக்கமான சம்பவங்களே ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.

சீதா -ராமன் திருமணம்

சீதா -ராமன் திருமணம்

சீதாவின் அக்கா தன்னுடைய காதலனுடன் திருமணத்தின்போது ஓடிப்போக வழக்கமாக எல்லா தொடர்களிலும் சினிமாவிலும் காட்டப்படும் அதே அரைத்த மாவுதான். தங்கை சீதாவை ராமிற்கு மணமுடிக்கிறார்கள். இந்தத் திருமணமும், அழகில்லாததாக கூறப்படும் சீதாவையும் ஏற்காத ராமின் அம்மா, அவரை முதலில் வீட்டிற்குள்ளேயே விடாமல் வெளியில் நிறுத்துகிறார். ஆனால் தான் அந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சபதம் செய்கிறார் சீதா.

ஹைலைட்டான விஷயம்

ஹைலைட்டான விஷயம்

அழகான பிரியங்காவிற்கு கண்ணாடி போட்டு, பற்களுக்கு கிளிப் போட்டு அவரை அழகில்லாமல் காண்பிக்கும் இயக்குநர், அவர் மனதின் அழகுதான் அழகு என்று போராடுவதாகவும் ப்ரமோவில் வேறு குறிப்பிட்டு கடுப்பை கிளப்புகிறார். தொடர்ந்து இந்தத் தொடரின் அடுத்தடுத்த கட்டங்களை தற்போதே யுகிக்க முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதையெல்லாம் விட ஒரு விஷயம் இந்த தொடரில் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

அந்த தொடரின் காப்பியா?

அந்த தொடரின் காப்பியா?

இந்தத் தொடர் அந்த தொடரின் காப்பியால்ல இருக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் டாக்டர் பாரதியை கண்ணம்மாவின் தங்கைதான் காதலிப்பார். ஆனால் பாரதி, கண்ணம்மாவை காதலிப்பார். அதேபோல தற்போது சீதாராமன் தொடரில் அக்காவை காதலிக்கிறார் ராம். ஆனால் சந்தர்ப்பம் அவருக்கு சீதாவை ஜோடியாக்குகிறது. இதேபோல விஜய் டிவியில் கண்ணம்மா கருப்பாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் ஹீரோவின் அம்மா வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார். அதேபோல தற்போது சீதா அழகாக இல்லாததால் வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் ஹீரோவின் அம்மா.

பாரதி கண்ணம்மாவின் காப்பி?

பாரதி கண்ணம்மாவின் காப்பி?

பாரதி கண்ணம்மா தொடரில் மாமியாரை ஒரு கட்டத்தில் எதிர்ப்பார் கண்ணம்மா. அதேபோல இந்தத் தொடரிலும் தன்னுடைய மாமியாரை எதிர்த்து பேசுகிறார் சீதா. இவ்வாறு வெற்றிகரமாக இருந்து ஒரு கட்டத்தில் மொக்கை வாங்கிய பாரதி கண்ணம்மா தொடரின் மறுபதிப்பாக வெளியாகி வருகிறது சீதாராமன். இதையடுத்து ப்ளீஸ் ப்ளீஸ் தயவுசெஞ்சி யோசிச்சி நல்ல கதையா கொடுங்கப்பா என்று ரசிகர்கள் கதறுவதையும் கேட்க முடிகிறது.

More from Filmibeat

Read more about: sita raman reshma pasupuleti
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X