Radhika Merchant: கர்ப்பமாக இருக்கிறாரா ராதிகா மெர்சண்ட்.. நீடா அம்பானி கண்ணும் கருத்துமா பாத்துக்கறாங்களே!
மும்பை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா அண்மையில் தனது இல்லத்தில் பிரமாண்டமான தீபாவளி விருந்து ஒன்றை நடத்தினார். இந்த சிறப்புமிக்க நிகழ்வில், திரைப்பிரபலங்கள் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த விருந்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்தக் கொண்டாட்டத்தில், நீதா அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் கலந்துகொண்டனர். விருந்தில் நீதா அம்பானி செய்த ஒரு காரியம், ராதிகா மெர்ச்சன்ட் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதைப் பற்றி இணையத்தில் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.
மணீஷ் மல்ஹோத்ரா அளித்த இந்த தீபாவளி விருந்தில், நீதா அம்பானி வெள்ளி நிற புடவையிலும், ராதிகா மெர்ச்சன்ட் அழகிய ஆஃப்-ஒயிட் புடவையிலும் கலந்து கொண்டனர். லூஸ் ஹேர், பளபளப்பான முகம் மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் ராதிகா மெர்ச்சன்ட் மிகவும் அழகாகக் காணப்பட்டார்.

கையை பிடித்துக் கொண்டே: ஆனால், அனைவரின் கவனமும் ராதிகாவின் முகத்தை விட, நீதா அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் கைகோர்த்து நடந்ததிலேயே இருந்தது. விருந்து முழுவதும் நீதா அம்பானி, மருமகள் ராதிகாவின் கையை ஒரு வினாடி கூட விடாமல் பிடித்திருந்தார். இது நீதா அம்பானியின் அக்கறையைக் காட்டுவதாக சிலர் கருதினர்.
ராதிகா மெர்ச்சண்ட் கர்ப்பம்: ராதிகா மெர்ச்சன்ட் கர்ப்பமாக இருக்கலாம் என்பதால் நீதா அம்பானி அவரது கையைப் பிடித்துக் கொண்டதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலமாகவே ராதிகாவின் கர்ப்பம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அம்பானி குடும்பத்தினர் இதுவரை இதை உறுதிப்படுத்தவில்லை. ராதிகா மற்றும் ஆனந்தின் திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராதிகா திருமணத்திற்கு முன்பும் பல அம்பானி குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
பிரமாண்ட திருமணம்: ஆன்ந்த அம்பானி ராதிகா மெர்சண்ட் திருமணம் மிகவும் பிரமாண்டமாக, பல நூறு கோடிகள் செலவு செய்து நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து எல்லாம் திரைப்பிரபலங்கள், உலக அளவில் பணக்காரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர், நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியர், மாதவன் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணக் கொண்டாட்டங்கள் மட்டும் சுமார் ஒரு ஆண்டுக்கு நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











