சூர்யவம்சம் போல ஹிட் கொடுக்குமா சசிகுமாரின் ராஜவம்சம்? வரும் 26ஆம் தேதி தெரியும் !

சென்னை : சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடிக்க, கே.வி.கதிர்வேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ராஜவம்சம்.

ராஜவம்சம் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது.திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த படம் சினிமா ரசிகர்களால் பெரும் அளவு எதிர்பார்ப்பில் உள்ளது.

சசிகுமார் படம் என்றாலே செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் இந்த படம் மற்ற படங்களை விட எப்படி தனித்துவம் பெறுகிறது என்பது தான் சினிமா ரசிகர்கள் ஆர்வத்திற்கு காரணம்.

உறவுகள் முக்கியம்

உறவுகள் முக்கியம்

இப்பொது இருக்கும் காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பத்தையே விரும்புகின்றனர்.முன்னோர்களின் பெயர்கள் கூட பல குழந்தைகளுக்கு தெரிவது இல்லை. அதை சுட்டி காட்டும் விதமாக கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பெருமைகளையும் கூறும் படமாக அமைந்து இருக்கின்றது ராஜவம்சம் திரைப்படம்.

பல நடிகர்கள்

பல நடிகர்கள்

ராஜவம்சம் படத்தில் சசிகுமார்,நிக்கி கல்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,யோகி பாபு, சதிஷ், தம்பி ராமையா, விஜயகுமார்,மனோ பாலா, சாம்ஸ், ரேகா என்று பல பிரபல நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படத்தை கே.வி. கதிர்வேல் இயக்க, டி.டி ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்து உள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய,இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் சாம் சிஎஸ் .

சசிகுமார் செண்டிமெண்ட்

சசிகுமார் செண்டிமெண்ட்

பேய் படம்,காதல் ரொமான்ஸ் என்று சினிமாவை சூழ்ந்து இருக்கும் இந்த காலத்தில் செண்டிமெண்ட்,மற்றும் கூட்டு குடும்பம் கதை என்றாலே சினிமா ரசிகர்கள் வியப்பாக தான் பார்க்கின்றனர்.சமீபத்தில் வெளிவந்த உடன்பிறப்பே போன்ற செண்டிமெண்ட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

பல போட்டி

பல போட்டி

திரையரங்குகளில் வரும் 26ஆம் தேதி வெளிவரும் இந்த படத்திற்கு போட்டியாக சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருக்கும் மாநாடு படமும்,நடிகர் வெற்றி நடிப்பில் வனம் படமும் வெளிவரவுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளிவருவதால், இந்த போட்டியில் எந்த படம் வெற்றிபெற போகுது என்று மிகுந்த எதிர்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X