எந்திரன் 2-ம் பாகம்... அஜீத்தை கைகாட்டினாரா ரஜினி?

By Shankar

எந்திரன் 2-ம் பாகத்தில் தனக்கு பதில் அஜீத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சிபாரிசு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியை இயக்குநர் ஷங்கர் தரப்பு மறுத்துள்ளது.

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் 'எந்திரன்' 2010-ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் படம் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது எந்திரன்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்-2' என்ற பெயரில் எடுக்கிறார் ஷங்கர். இதன் திரைக்கதையும் அவர் தயார் செய்துவிட்டார். விக்ரமை வைத்து அவர் இயக்கியுள்ள ஐ படம் ரிலீசானதும் எந்திரன் 2-ம் பாகம் பட வேலைகளை தொடங்குகிறார்.

ரஜினிதான் வேண்டும்

ரஜினிதான் வேண்டும்

எந்திரம் 2-ம் பாகம் படத்திலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது ஷங்கரின் விருப்பம். இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது எந்திரன் 2-ம் பாகத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக ரஜினியும் கூறியுள்ளார்.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

இந்த படத்தில் நடிப்பது குறித்து தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ரஜினி கருத்து கேட்டதாகவும், அவர்கள் உடலை ரொம்ப வருத்தி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத்?

அஜீத்?

இதையடுத்து இந்த படத்தில் ஒருவேளை நடிக்க முடியாவிட்டால், தனக்கு பதில் அஜீத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஜினியே ஷங்கரிடம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி இருந்தால்தான் வியாபாரம்..

ரஜினி இருந்தால்தான் வியாபாரம்..

இந்தப் படத்துக்கு பட்ஜெட் என ரூ 200 கோடிக்கு மேல் கணக்குப் போட்டிருக்கிறார்கள். இந்தத் தொகையை வசூலிக்க ரஜினி நடித்தால்தான் உண்டு. தமிழில் மற்ற ஹீரோக்களின் எந்தப் படமும் திரையரங்குகளில் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை. ஆனால் ரஜினியின் எந்திரன் ரூ 375 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது. எனவே ரஜினி இல்லாவிட்டால் இந்தப் படத்தை எடுப்பது சாத்தியமில்லை என ஷங்கர் தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X